அந்த வசதி கூட இல்லாத மக்களை விளக்கை ஏற்ற சொல்கிறார் – மாஸ்டர் பட பிரபலம் ட்வீட்.

0
1267
modi
- Advertisement -

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பல்வேறு உலக நாடுகள் பாதிப்படைந்துள்ளது. உலகளவில் இந்த நோயால் கடந்த சில மணி நேரத்திற்க்கு முன்பாக வரை 1015728 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை உலகளவில் இந்த நோயினால் 53,202 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்த நோயினால் இந்தியாவில் 2301 பேருக்கும் மேற்பட்டோர் பதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 53 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்த நோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகிறது.

-விளம்பரம்-

மேலும், இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று (ஏப்ரில் 3) வீடியோ மூலம் உரையாற்றினார். அப்போது, ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு , அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்றுமாறும், மொபைல் டார்ச் மூலம் கொரோனாவிற்கு எதிரான வெளிச்சத்தை காட்டுங்கள். உங்கள் வீட்டு வாசலில் இருந்தோ பால்கனியில் இருந்தவாறு இதை செய்யுங்கள்.

- Advertisement -

தெருவில் கூட்டமாக சேர வேண்டாம். வீட்டில் ஒளியேற்றும் போது சமூக விளைவுகளை கடைபிடியுங்கள். நாம் ஊரடங்கில் தான் இருக்கிறோமே தவிர, தனியாக இல்லை. ஒற்றுமையின் வலிமையை மக்கள் உணர வேண்டும் என்றும் கூறி இருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து ஆடை பட இயக்குனரும் மாஸ்டர் படத்தில் எழுத்து மற்றும் வசனகர்த்தாவாக பணியாற்றி வரும் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.

Image

-விளம்பரம்-

அதில், வாசலில் நின்று கை தட்ட சொன்னதுக்கு தெருவில் கூட்டம் கூட்டமாக நின்று தட்டை தட்டிய மக்களுக்கு முதலில் வருத்தங்களும், கண்டனங்களும் தெரிவித்திருக்கலாம். இப்போது அடுப்பை பற்ற வைக்க கூட வசதியில்லாத மக்களை விளக்கை ஏற்ற சொல்கிறார். சற்று பயமாக தான் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே, கொரோனவாவிற்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கடந்த மார்ச் 22 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வீட்டில் இருந்தபடி மோடி மக்கள் அனைவரையும் கை தட்டுமாறு கூறி இருந்தார். ஆனால், இந்த நோக்கத்தை சரியாக புரிந்து கொள்ளாத மக்கள் சிலர் வீட்டின் வெளியே ஒன்று கூடி தட்டு கரண்டி போன்றவற்றை வைத்து ஒளி எழுப்பினர். இது பலரின் விமர்சனத்திற்கும் உள்ளானது என்பதும் குறிப்பித்தக்கது.

Advertisement