இன்னும் நான் சந்திக்கவில்லை. காதல் குறித்து மனம் திறந்த நடிகை திரிஷா.

0
587
trisha-96
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாகவே நடிகை திரிஷா அவர்கள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை திரிஷா அவர்கள் காதல் குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.

-விளம்பரம்-

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டு இருப்பதால் சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை என அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். வீட்டுக்குள் இருப்பது போரடிக்காமல் இருப்பதாக பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அதோடு ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பிரபலங்கள் சரியாக பதில் அளித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகை திரிஷா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விக்கு பதில் அளித்து உள்ளார்.

- Advertisement -

அதில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் உங்களுக்கு பிடித்த பாடல் என்ன என்று ரசிகர் கேட்டுள்ளார். அதற்கு திரிஷா மன்னிப்பாயா பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து உங்கள் வாழ்க்கையில் காதல் கண்டறிந்து விட்டீர்களா? என்று கேட்டுள்ளார். அதற்கு திரிஷா அவர்கள் இன்னும் நான் என் காதலைசந்திக்கவில்லை என்று பதிலளித்துள்ளார். பின் உங்களை பொறுத்தவரை காதல் என்றால் என்ன? என்று இன்னொரு ரசிகர் கேட்டார்கள். அதற்கு திரிஷா அவர்கள் காதல் பட்டாம்பூச்சி போன்ற உணர்வை கொடுப்பது என்று பதிலளித்துள்ளார்.

மேலும், உண்மை காதல் இன்னும் இருக்கிறதா? என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு திரிஷா உண்மையான காதல் இருக்கிறது எனவும், அது இல்லாமல் வாழவே முடியாது எனவும் காதல் குறித்து ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு உணர்ச்சிபூர்வமான வெளிப்படையான பதிலை கொடுத்துள்ளார். தற்போது அந்த இன்ஸ்டாகிராம் கேள்விகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது நடிகை திரிஷா வரலாற்று சிறப்புமிக்க நாவலான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். அதோடு இவர் கர்ஜனை, ராக்கி, போகி, பரமபதம் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement