தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் த்ரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்திருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
மேலும், 40 வயதை கடந்தும் இவர் தமிழ் திரையுலகில் சிங்கிளாக வலம் வரும் கதாநாயகிகளில் இவரும் ஒருவர். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக டாப் ஹீரோயினாக விளங்கி வரும் இவர் இன்றும் புதுமுக நாயகிகளுக்கு போட்டியாக விளங்குகிறார். கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியாகியிருந்த லியோ படத்தில் திரிஷா நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்திருந்தது.
திரிஷா திரைப்பயணம்:
இதனை அடுத்து சமீபத்தில் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியிருந்த கோட் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் திரிஷா குத்தாட்டம் போட்டிருந்தார். இதை தொடர்ந்து தற்போது இவர் அஜித்தின் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர இவர் வெப் சீரிஸ் போன்ற சில படங்களிலும் கமிட் ஆகி பிஸியாக பயணித்துக் நடித்துக் கொண்டிருக்கிறார்.
திரிஷா பதிவு:
இப்படி இருக்கும் நிலையில் திரிஷா போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் சலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது இவர், தேன் குழல் இன் என்று போட்டு ஸ்பெயின் நாட்டின் கொடியை பதிவிட்டு இருக்கிறார். அது பார்ப்பதற்கு தமிழக வெற்றிக் கழகம் கொடி போல இருக்கிறது. இதனால் மறைமுகமாக இவர் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் தான் இப்படி பதிவு போட்டு இருக்கிறார் என்றெல்லாம் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். ஆனால் , உண்மையில் அவர் போட்டு இருக்கும் கொடி ஸ்பெயின் நாட்டு உடையது என்று குறிப்பிடத்தக்கது.
நெட்டிசன்கள் கருத்து:
சமீப காலமாகவே விஜய்- திரிஷா குறித்து ஏதாவது ஒரு செய்தி இணையத்தில் சர்ச்சையாகப்பட்டு வருகிறது. இவர்கள் இருவருமே இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் விஜய் உடன் சேர்ந்து லியோ படத்தில் நடித்திருந்தார். அப்போது தான் இவர்கள் இருவருக்கும் மத்தியில் கிசுகிசு என்று பேச தொடங்கப்பட்டது. இதனை அடுத்து விஜயின் பிறந்தநாளுக்கு திரிஷா அவர்கள் மெசேஜ் போட்டு இருந்தார். அதன் பின் இவர்கள் காதலிக்கிறார்கள், விஜய்- சங்கீதா இருவரும் விவாகரத்து செய்ய இருக்கிறார்கள் என்றெல்லாம் கூறியிருந்தார்கள்.
விஜய் – த்ரிஷா குறித்த சர்ச்சை:
அதற்கேற்ப சங்கீதாவும் சமீப காலமாகவே விஜயின் படத்தின் பிரமோஷனில் கலந்து கொள்வதில்லை. ‘லியோ’ படத்திலிருந்து த்ரிஷா-விஜய் இருவருமே வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றிருப்பதாகவும் கூறப்பட்டது. பின் ‘கோட்’ படத்திலும் த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இப்படி விஜய்- த்ரிஷா குறித்த விவகாரம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால், உண்மையில் இவர்கள் இருவருமே நல்ல நண்பர்கள் தான்.