இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி சரத் குமார், ராதாரவி, கருபழனியப்பன் போன்றவர்கள் நடித்துள்ளனர். அது போக இந்த படத்தில் 90 நடிகையான துளசியும் நடித்துள்ளார் என்பது சமீபத்தில் வெளியாகியுள்ள புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது. சமீபத்தில் நடிகை துளசி, நடிகர் விஜய்யின் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது.
பிரபல நடிகையான துளசி இந்த படத்தில் நடிகர் விஜய்யின் அம்மாவாக நடித்துள்ளார். நடிகை துளசி 1967 ஆம் தெலுங்கில் வெளியான "பார்யா " என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அத்தோடு தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் நடிகை துளசி நீண்ட இடைவேலைக்கு பின்னர் 2010 ஆம் ஆண்டு வெளியான "ஈசன்" படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் "பண்ணையாரும் பதமினியும், ஆதாலால் காதல் செய்வீர், பாண்டிய நாடு " போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது முதன் முறையாக "சர்கார்" படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் அம்மாவாக நடித்துள்ளார் நடிகை துளசி.




