சினிமா துறைகளை காட்டிலும் சின்னத்திரை நடிகை நடிகர்களுக்கே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சின்னத்திரை நடிகைகள் என்றால் அவர்களுக்கு இல்லத்தரிசி ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளனர் என்றே கூறலாம். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக நிறைவடைந்த தெய்வமகள் சீரியல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து மகிழ்ந்து வந்தார்கள் என்று கூட சொல்லலாம். இந்த சீரியலில் “சத்யா” என்ற கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்து வந்தார்.
நடிகை வாணி போஜன் முதலில் மாயா என்ற தொடரின் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு போன்ற பல தொடர்களில் நடித்து உள்ளார். தெய்வமகள் சீரியல் மூலம் வாணி போஜனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூட சொல்லலாம் .அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். வீட்டு இல்லத்தரசிகளிடையே பெரும் ரசிகர்கள் கொண்டுள்ள இவர் பல்வேறு இன்னல்களை சந்தித்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளதாக கூறி உள்ளார்.
அ மேலும், வாணி போஜன் அவர்கள் தெய்வமகள் சீரியலுக்கு பிறகு எந்த ஒரு சீரியலிலும் நடிக்க வில்லை. இதனைத் தொடர்ந்து வாணி போஜன் அவர்கள் சினிமா திரையில் கலக்கி வருகிறார். இவர் முதன் முதலாக விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை தொடர்ந்து இவர் ஓ மை கடவுளே படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் லாக்கப் படத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் ஹாட்ஸ்டார் தளத்திற்காக ஜெய் மற்றும் வாணிபோஜன் இருவரும் இணைந்து ட்ரிபிள்ஸ் என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த வெப்சீரிஸ்ஸின் ட்ரைலர் வெளியாகி இருந்தது.
அதில் ஒரு காட்சியில் லிப் லாக் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இதில் இருவரும் ரொமான்ஸ் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்துள்ளனர். வருகிற டிசம்பர் 11ஆம் தேதி டிரிபிள்ஸ் வெப்சீரிஸ் வெளியாக உள்ளது.நடிகை வாணி போஜன் படங்களில் கமிட் ஆவதற்கு முன்பகே இவர் பல்வேறு போட்டோ ஷூட்களை நடத்தி இருந்தார். அதன் பின்னர் தான் இவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைத்தது என்று கூட சொல்லலாம். இந்நிலையில், தன்னுடைய இளம் வயதில் தொப்புள் தெரிய கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் வாணி போஜன். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.