தன் மகன் ஹீரோவாக அறிமுகம் ஆக இருப்பதைப் பற்றி நிகழ்ச்சியில் எமோஷனலாக வனிதா விஜயகுமார் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக சோசியல் மீடியாவில் பிரபலமான நபர்களில் ஒருவராக வனிதா விஜயகுமார் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபல நட்சத்திர தம்பதிகளாக இருந்த விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் ஆவார். தற்போது வனிதா மகன் ஸ்ரீஹரி தமிழ் சினிமாவில் ஹீரோவாக கிளம்பிறங்க இருக்கிறார். இவர் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்தை இயக்குனர் பிரபு சாலமன் இயக்குகிறார்.

இப்படத்தில் இயக்குனர் பிரபு சாலமன் மகள் ஹேசல் ஷைனி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். சிங்கத்தை மையமாக வைத்து எடுக்கும் படத்திற்கு Mambo என்று பெயரிடப்பட்டிருக்கிறது. மேலும், சமீபத்தில் தான் இந்தப் படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜயகுமார், தனது பேரன் ஸ்ரீ ஹரி குறித்து பல விஷயங்களை பேசியிருந்தார். அதோடு இவர் நடிப்பதற்கு காரணம் நடிகர் ரஜினி தான் என்றும் கூறி இருந்தார்.
ஸ்ரீஹரி குறித்து வனிதா பதிவு:
இதை அறிந்த வனிதா விஜயகுமார் மிகவும் எமோஷனலாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகப் போகிற எனது மகன் விஜய் ஸ்ரீஹரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். குருவாக ஸ்ரீஹரிக்கு வழிநடத்துற ரஜினி அங்கிளுக்கு எனது நன்றி. என்னோட முழு அன்பு மற்றும் பிரார்த்தனையோட அழுதுகிட்டே தான் நான் இதை டைப் பண்றேன். என்னோட குழந்தை ஹீரோவாக போகிறான். எனக்கு கொடுக்கிற அன்பையும் ஆதரவையும் என்னுடைய மகனுக்கும் கொடுங்கள் என்று பதிவிட்டு இருந்தார்.
View this post on Instagram
நிகழ்ச்சியில் வனிதா:
இந்த நிலையில் பிரசாந்த் நடித்து இருக்கும் அந்தகன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை வனிதா, ரொம்ப வருஷமா ஸ்ரீஹரிக்காக அடக்கி வச்சிருந்த எமோஷனல் சில தினங்களுக்கு முன்பு உடைந்துவிட்டது. என் மகன் ஹீரோவாக நடிக்கிறான் என்று அறிந்து நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். பெரிய தயாரிப்பு, பெரிய இயக்குனர் படத்தில் அவர் நடிப்பது நினைத்தால் பெருமையாக இருக்கிறது. அவன் சிங்கத்துடன் சேர்ந்து நடித்து இருக்கிறானாம்.
https://youtube.com/shorts/-XtCdhKqmYg?si=_WN08Hh9kEbFk2_d
மகன் குறித்து கண்கலங்கிய வனிதா:
அது பெரிய சிங்கம். எனக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து சிங்கத்துடன் நடிக்க சொன்னால் கூட நடிக்க மாட்டேன். அவன் நடித்திருக்கிறான். இது எனக்கு ரொம்ப பெருமையாகவும், சந்தோஷமாக இருக்கிறது. இந்த சந்தோஷத்தை வார்த்தையால் சொல்ல முடியவில்லை. தான் ஆடவில்லை என்றாலும் தன் தசையாடும் என்று சொல்வார்கள். அதே போல் தான் என்னுடைய விஷயத்திலும் நடந்தது என்று எமோஷனலாக கண் கலங்கி பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.வனிதா அவர்கள் கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
வனிதா குடும்பம்:
இவர்களுக்கு ஸ்ரீஹரி, ஜோவிகா என்று இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். நன்றாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2005 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. அதன் பின்னர் தனது மகனை தன்னுடன் அனுப்பி விட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆகாஷ். ஆனால், வனிதா சம்மதிக்கவில்லை. கடைசியில் இவர்களின் குடும்ப விவகாரம் அனைவரும் அறிந்ததே. வனிதா மகன் விஜய் ஸ்ரீஹரி அவரின் தந்தை ஆகாஷ் உடன் வளர வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்குப் பின் அப்பாவின் வளர்ப்பில் இருக்கும் ஸ்ரீஹரி, தனது தாத்தா விஜயகுமார் குடும்பத்துடன் நல்ல தொடர்பில் இருந்து வருகிறார். இவர் வெளிநாட்டில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை முடித்து இருக்கிறார்.






