அந்த புகைப்படத்தை எல்லாம் வெளியிட்டால் விஜய் என்னை கொன்றுவிடுவர்…சர்க்கார் நடிகை பேட்டி

0
366
Vijay

நடிகர் விஜய் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வரும் “சர்கார்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் வரலக்ஷ்மி சரத்குமாரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Varalakshmi

நடிகை வரலக்ஷ்மி இந்த படத்தில் நடிக்க கமிட் ஆனதிலிருந்தே இந்த படத்தை பற்றி ஒரு சில தகவலைகளையும், புகைப்படங்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் ‘சர்கார்’ படத்தில் காமெடியனாக நடித்துள்ள யோகி பாபுவின் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த விடியோவில் நடிகர் யோகி பாபு ஒரு அரபிக் பெண் போல வேடமிட்டு காட்சியளிக்கிறார். மேலும், அந்த வீடியோவில் யோகி பாபுவின் கன்னத்தை ஏதோ ஒரு கை கிள்ளுகிறது. அந்த கை யாருடையதாக இருக்கும் என்று யூகியுங்கள் என்று அந்த வீடியோ பதிவில் நடிகை வரலக்ஷ்மி பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலக்ஷ்மி உண்மையில் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி இருப்பர் என்று கேட்டதற்கு, எப்போதும் படப்பிடிப்பில் அமைதியாக இருக்கும் விஜய், என்னுடன் பல சேட்டைகளை செய்வார் .அந்த புகைப்படத்தை ஏலம் வெளியிட்டால் அவர் என்னை கொன்றே விடுவார் என்று கிண்டலாக கூறியுள்ளார்.