வீட்டு வேலை செய்த நபரால் சிறுவயதில் பாலியில் தொல்லை..! பிரபல நடிகை ஓபன் டாக்

0
1444
Actress Varalakshmi

பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலக்ஷ்மி சிம்பு நடித்த “போடா போடி” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் நடித்த “தரை தப்பட்டை ” என்ற படத்தில் வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

Varalakshmi-Sarathkumar

சரத் குமாரின் மகளாக இருந்தாலும் இவரது வாழ்விலும் பாலியல் தொல்லை நடந்துள்ளதாம். அதுவும் தனது வீட்டில் வேலை செய்யும் நபர் மூலமாகவே இந்த சம்பவம் அவருக்கு நடந்துள்ளதாம்.இதுபற்றி அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் தெரிவிக்கையில் “எனக்கும் சிறு வயதில் தனது அப்பா சரத் குமாரிடம் வேலைசெய்த சுந்தரமூர்த்தி என்ற நபர், தன்னிடம் ஒருமுறை தவறாக நடந்துள்ளார் என்றும், தான் அப்போது சின்ன பெண் என்பதால் அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டது கூட தனக்கு தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

Varalakshmi

மேலும், அந்த சம்பவம் நடந்த போது அதை பற்றி யாரிடம் சொல்வது என்று கூட தெரியவில்லை, பின்னர் விவரம் தெரிந்த வயதில் தான் தனக்கு புரிந்தது என்று கூறியுள்ளார். பெண் குழந்தைகளுக்கு தொடுதல் குறித்த அறிவுகளை சொல்லி வளருங்கள், அவர்களிடம் மற்றவர்கள் தகாத இடத்தில் தொடுவதை அனுமதிக்க கூடாத என்று சொல்லி வளருங்கள் ” என்று கூறியுள்ளார்.