பிரபல நடிகை விசித்ரா சினிமா துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்கள் குறித்து கூறியிருக்கும் விஷயங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து சினிமா உலகமே அதிர்ந்து போயிருக்கிறது. தற்போது பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நடந்த அநியாயங்களை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். மேலும், பிரபல நடிகைகள் குஷ்பூ, ஊர்வசி போன்றோர் இது குறித்து தங்களுடைய கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், தற்போது பிக் பாஸ் மூலம் மீண்டும் பிரபலமான, நடிகை விசித்ரா இந்த விஷயம் குறித்து தனது கருத்துக்களை கூறியுள்ளார்.
அதில் அவர், இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை சினிமாவில் ஹீரோயின்களுக்கு மட்டுமே நடப்பதில்லை. டச் அப் ஆர்டிஸ்ட், அசிஸ்டன்ட் கேமரா விமன், காஸ்ட்யூம் டிசைனர், டான்சர்ஸ், ஜூனியர் ஆர்டிஸ்ட் என்று சினிமாவில் இருக்கிற எல்லா பெண்களுக்கும் இந்த நிலைமைதான். சினிமாவில் நீங்கள் நுழைய வேண்டும் என்றால், ஆணாக இருந்தால் கமிஷன் கொடுக்க வேண்டும். பெண்ணாக இருந்தால் அது வேற.. நடிகர் சங்கம் மத்த பிரச்சனைகளுக்கு கொடுக்குற முக்கியத்துவத்தை ‘காஸ்டிங் கவுச்’சுக்கு கொடுப்பதில்லை.
காஸ்டிங் கவுச் குறித்து விசித்ரா:
மேலும், யாராவது ஒரு நடிகை துணிந்து இது குறித்து பேசினாலும், அவங்க அந்த விஷயத்தை அப்படியே மறைச்சிடறாங்க. இதுல, பிரச்சனை நடந்த அப்போவே சொல்ல வேண்டியது தானே’ என்று அப்படியே சமாளிச்சிடுவாங்க. தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும், குடும்பத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று நினைக்கிற பெண்கள் எப்படி வெளிப்படையாக சொல்ல முடியும். அதேபோல், அவுட்டோர் ஷூட்டிங் எல்லாம் எடுக்கும் போது பெரிய நடிகைகளுக்கு மட்டும் தான் கேரவன் இருக்கும். மற்ற ஜூனியர் ஆர்ட்டிஸ்டுக்கு எல்லாம், ரொம்ப காசு செலவாகும் என்று எந்த வசதியும் பண்ணி தர மாட்டாங்க.
ஹேமா கமிட்டி குறித்து:
சில நடிகைகள் காதல் என்கிற பெயரில் டைரக்டர் கிட்ட மாட்டிப்பாங்க. சினிமாவுல சாதிக்கணும் என்பதற்காக வருவாங்க, ஆனால் அவங்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் ஒரு பிரச்சினையாக இருக்கும். அதனால், தன்னோட பாதுகாப்புக்காக, பிடிக்காமலேயே ஒரு இயக்குனரோட ரிலேஷன்ஷிப்பில் இருப்பாங்க. மலையாளத் திரையுலகை புரட்டி போட்டிற்கும் ஹேமா கமிட்டியிம் பல வருடங்கள் கழித்தே இந்த உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கு. அதுவும் ரேவதி, பார்வதி போன்ற பெரிய நடிகைகள் முயற்சி செய்தால் மட்டும்தான் இது எல்லாம் எடுத்துருக்கு.
இதற்கு முடிவு கட்டவேண்டும் :
அதே மாதிரி, இயக்குனர்களும் நடிகர்களும் அவங்க கூட வேலை பார்க்கிற நடிகைகளுக்கு பாலியல் பிரச்சனை வந்தால் அதற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க மாட்டிக்கிறாங்கன்னு தெரியல. தற்போது நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருக்கிற விஷால் மற்றும் கார்த்தி போன்ற இளைஞர்களாவது இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும். உங்களை தப்பா அப்ரோச் செஞ்சா சங்கத்துல புகார் கொடுங்க என்று பெண்களுக்கு அவர்கள் தைரியம் கொடுக்க வேண்டும். அப்படி புகார் கொடுக்கிற பெண்களுக்குச் சம்பந்தப்பட்ட ஆண்கள் கிட்ட இருந்து பாதுகாப்பையும் அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
என்னால் முடிந்ததை செய்வேன் :
மேலும் குஷ்பூ, லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, சின்மயி போன்றோர் இந்தப் பிரச்சினை குறித்து பல காலமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனா, அவங்க எல்லாரும் தனித்தனியா பேசிட்டு இருக்காங்க. அவங்க எல்லாரும் ஒண்ணாக சேர்ந்து குரல் வேண்டும். அவங்க கூட சேர்ந்து குரல் கொடுக்க நானும் ரெடியாக இருக்கிறேன். சினிமா துறையில் இருக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக என்னால் முடிந்ததை நான் செய்ய நினைக்கிறேன் என்று ஆதங்கத்தோடு கூறியுள்ளார்.