சின்னத்திரையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு சந்தானம், சிவகார்த்திகேயன் தொடங்கி பிரியா பவானி ஷங்கர், வாணி போஜன் என பல நடிகர் நடிகைகள் வந்து உள்ளனர். அதே போல ஆரம்பத்தில் சினிமாவில் நடித்து வந்த பல நடிகர் நடிகைகள் பின்னர் வாய்ப்புகள் குறைய சீரியல் பக்கம் வந்தனர். அந்த வகையில் மருத்துவத்துறையில் ஒரு நல்ல அங்கீகாரத்தை பெற்று சினிமா மீது இருந்த ஆர்வம் காரணமாக நடிக்க வந்தவர் வித்யா பிரதீப். ஆரம்பத்தில் இவர் செய்தித்தாள் மற்றும் பத்திரிக்கைகளில் விளம்பர மாடலாக நடித்து வந்தார். பிறகு தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘சைவம்’ படத்தின் மூலம் வித்யா நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் பசங்க2, ஒண்ணுமே புரியல, அச்சமின்றி போன்ற பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் வித்யா.

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி சீரியலில் நடித்து வருகிறார். மேலும், கடந்த ஆண்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தடம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் வித்யா அவர்கள் மலர்விழி என்ற போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் வித்யா மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். இந்த நிலையில் வித்யா தடம் படத்திற்கு முன்பாக தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை கூறியுள்ளார்.

Advertisement

அதில் தடம் படத்திற்கு முன்பாக என்னுடைய வாழ்க்கை வேறு மாதிரி இருந்தது. நான் ஒப்பந்தமான ஆறு படத்திலிருந்து நீக்கப்பட்ட நியாயமற்ற காரணத்திற்காக அடுத்தடுத்து படங்களில் இருந்து நீக்கப்பட்டதால் நான் மிகவும் மனமுடைந்து போனேன். எனவே சினிமா எனக்கு தகுந்த குறை இல்லை என்பதால் என்னுடைய படிப்பில் கவனம் செலுத்தினேன். ஒருநாள் ஸ்ருதி எனக்கு நடு இரவில் கால் செய்து உனக்கு ஒரு ஆடிஷன் இருக்கிறது. நாளை சென்று இயக்குனரை சந்திக்குமாறு சொன்னார். அந்த சமயம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நான்.

அலுவலகத்திற்கு சென்று அங்கு தான் மகிழ்திருமேனி சாரை சந்தித்தேன் அவர் என்னிடம் இந்த ஆடிஷன் கடந்த சில மாதமாக நடந்து வருகிறது என்றும் காரணம் இந்த படத்தில் வரும் இந்த கதாபாத்திரம் மிகவும் முக்கியமான கதாபாத்திரம் என்றும் கூறியிருந்தார் மேலும் என்னுடைய கண்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது என்றும் சொன்னார் இருப்பினும் படக்குழு என்னை தேர்வு செய்யவில்லை மகிழ்திருமேனி சாரிடம் என்னுடைய கதாபாத்திரம் குறித்து நீண்ட நேரம் பேசிய பின்னர் எனக்குள் ஒரு நம்பிக்கை வந்தது அதன் பின்னர்தான் டெஸ்ட் ஷூட் செய்து அந்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்தது.

Advertisement

தடம் திரைப்படம் எனது திரைப்பட வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. திறமையை மட்டும் வைத்துக்கொண்டு சினிமாவில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும் கொடுத்தது இங்கே திறமையை மட்டும் பார்க்கும் நல்ல இயக்குனர்கள் இருக்கின்றார்கள்.ஆனால், என்னைப் போன்று தாமாக நடிகையாக இருக்கும் நடிகைகள் எந்த ஒரு சிபாரிசு அல்லது வாரிசு நடிகராக இல்லாமல் வந்தால் அவர்கள் நிச்சயம் கடினமான சவாலை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். ஒரு சில உடன்படுக்கைகளுக்கு நீங்கள் சமபதிக்கவில்லை என்றால், நீங்கள் நிராகரிக்க படலாம் அல்லது உங்களை நடிகையாகவே ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் உங்களையும், உங்களது கடின உழைப்பையும் நம்பினால் நீங்கள் நிச்சயம் சாதிக்க முடியும்.

Advertisement

Advertisement