கொரோனா பிரச்சனை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்ட்டுள்ளது. பொது மக்களை போல பிரபலங்களும் ஊரடங்கினால் வேலை இல்லாமல் முடங்கி இருந்தனர். மேலும், கொரோனா பிரச்சனை காரணமாக பல்வேறு பிரபலங்களின் திருமணம் கூட சத்தமில்லாமல் முடிந்தது. அந்த வகையில் பிரபல நடிகையான வித்யூ லேகாவும் ஊரடங்கிற்கு மத்தியில் சத்தமில்லாமல் தனது திருமணத்தை முடித்தார் வித்யூ லேகா. தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் வாரிசுகள் தற்போது நடிகர்களாகவும், நடிகைகளாகவும் ஜொலித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை வித்யு லேகாவும் ஒருவர். இவர் பிரபல நடிகர் மோகன் ராமனின் மகளாவார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான “நீதானே என் பொன் வசந்தம் “படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யூ லேகா. இந்த படத்தை தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கிச்சட்டை, மாஸ் என்று பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் பப்ளியான லுக்கில் தனது காமெடியால் பலரையும் வெகுவாக ஈர்த்தது. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பஞ்சு மிட்டாய் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவரை தமிழில் எந்த படத்திலும் காண முடிவதில்லை. இருப்பினும் அம்மணி தெலுங்கு சினிமாவில் படு பிசியாக நடித்து வருகிறார். பல்வேறு உருவக் கேலிகளுக்கு உள்ளானர்.
இப்படி ஒரு நிலையில் தனது உடல் எடையை குறைத்து கேலி கிண்டல்களுக்கு பதிலடி கொடுத்தார். கடந்த இருபத்தி ஆறாம் தேதி தான் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் தன் கணவருடன் மால்தீவ்ஸ்க்கு ஹனிமூன் சென்றுள்ளார். அங்கு நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.