ஊரடங்கில் சத்தமில்லாமல் நிச்சயதார்த்தத்தை முடித்து நடிகை வித்யூ லேகா – புகைப்படங்கள் இதோ.

0
2005
Vidhyu-Raman
- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்ட்டுள்ளது. பொது மக்களை போல பிரபலங்களும் ஊரடங்கினால் வேலை இல்லாமல் முடங்கி இருந்தனர். மேலும், கொரோனா பிரச்சனை காரணமாக பல்வேறு பிரபலங்களின் திருமணம் கூட சத்தமில்லாமல் முடிந்தது. அந்த வகையில் பிரபல நடிகையான வித்யூ லேகாவும் ஊரடங்கிற்கு மத்தியில் சத்தமில்லாமல் தனது நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளார்.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் வாரிசுகள் தற்போது நடிகர்களாகவும், நடிகைகளாகவும் ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை வித்யு லேகாவும் ஒருவர். இவர் பிரபல நடிகர் மோகன் ராமனின் மகளாவார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான “நீதானே என் பொன் வசந்தம் “படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யூ லேகா. இந்த படத்தை தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கிச்சட்டை, மாஸ் என்று பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

இவர் பப்ளியான லுக்கில் தனது காமெடியால் பலரையும் வெகுவாக ஈர்த்தது. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பஞ்சு மிட்டாய் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவரை தமிழில் எந்த படத்திலும் காண முடிவதில்லை. இருப்பினும் அம்மணி தெலுங்கு சினிமாவில் படு பிசியாக நடித்து வருகிறார்.இவர் பப்ளியான லுக்கில் தனது காமெடியால் பலரையும் வெகுவாக ஈர்த்தது. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பஞ்சு மிட்டாய் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவரை தமிழில் எந்த படத்திலும் காண முடிவதில்லை. இருப்பினும் அம்மணி தெலுங்கு சினிமாவில் படு பிசியாக நடித்து வருகிறார்.

https://www.instagram.com/p/CEj3l90HMdy/?igshid=1g2ui73ahpc81

இந்த நிலையில் நடிகை வித்யு லேகாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வித்யு லேகா, கடந்த 26ம் தேதி எங்களுக்கு எளிமையாக நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்த விழாவில் நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டார்கள். யாராவது கேட்பதற்கு முன்னால் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் நாங்கள் இருவரும் முகக்கவசம் அணிந்து இருந்தோம். ஆனால், புகைப்படத்திற்காக தான் அதனை எடுத்து விட்டோம் . னைவருக்கும் மிக்க நன்றி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement