பட வாய்ப்பு இல்லாததால் சீரியலில் நுழையும் சென்னை 28 பட நடிகை ! புகைப்படம் உள்ளே

0
2910

கடந்த 2007ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை -28 முதல் பாகத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் விஜயலட்சுமி. இவர் இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார். அகத்தியன் தேசியவிருது பெற்ற 90களில் புகழ்பெற்ற இயக்குனர் ஆவார்.

vijaylakshmi

சென்னை-28 படங்களுக்கு பிறகு,

*அஞ்சாதே
*அதே நேரம் அதே இடம்
*கற்றது களவு
*ஆடாம ஜெய்ச்சோமடா
*வெண்ணிலா வீடு
*பிரியாணி

சென்னை-28 இரண்டாம் பாகம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் விஜயலட்சுமி.ஆனால், அவரால் தமிழ் சினிமாவில் தன்னை ஒரு ஹீரோயினாக நிலை நிறுத்திக்கொள்ள முடியவில்லை. தற்போது 28வயதாகும் அவர், கடந்த ஆண்டு துணை இயக்குநர் பேரொஸ் கான் என்பரை திருமணம் செய்துகொண்டார். பேரொஸ் கான் இயக்குனர் அறிவழகனின், துணை இயக்குனர் ஆவார்.

Vijaya-Lakshmi

திருமணத்திற்கு பிறகு விஜலட்சுமிக்கு பட வாய்ப்புகள் சுத்தமாக குறைந்தது. இதனால், தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து பண்டிகை என்ற திரைப்படத்தை தயாரித்தார் விஜயலட்சுமி.இதிலும் எதிர்பார்த்த வெற்றி கிடைகாதால், வேறு வழியின்றி சின்னத்திரை பக்கம் நகர்ந்து தற்போது சீரியலில் நடித்து வருகிறார். சன் டிவியில் புதிதாக நாயகி என்ற சீரிய ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலின் ஹீரோயினாக, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விஜயலட்சுமி.

இந்த சீரியல் ரவுடி கும்பலிடம் மாட்டும் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தை அந்த கும்பலிடம் இருந்து நாயகி எப்படி காப்பாற்றுகிறார் என்பதை மையமாக கொண்ட கதையாகும்.