பிரபல நடிகருடன் கல்யாண கோலத்தில் நடிகை விஜியின் மகள்.! இந்த நடிகரா.? புகைப்படம் இதோ.!

0
239

தமிழ் சினிமா பிரபலங்கள் வாரிசுகளும் சினிமாவில் நடிகர்களாக அறிமுகமாகி வருகின்றனர்.அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான விஜி சந்திரசேகரின் மகள் சினிமாவில் கதநாயகியாக அறிமுகமாகியுள்ளார். அனுபவமிக்க நடிகையான விஜி சந்திரசேகர் 1981 ஆம் சூப்பர் ஸ்டார் நடித்த “தில்லு முள்ளு” படத்தில் இயக்குனர் கே பாலுசந்தர் அவர்களால் அறிமுகமுகம் செய்யப்பட்டார். அதன் பின்னர் தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்து வந்த இவர் சமீப காலமாக தமிழ் அம்மா கதாபாத்திரத்தில் அசத்தி வருகிறார்.

lakshmi ramki

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான “மதயானை கூட்டம் ” என்று படத்தில் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அதே போல சமீபத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான “கடைக்குட்டி சிங்கம் ” படத்திலும் சத்யராஜின் மனைவியாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

நடிகை விஜி சந்திரசேகருக்கு, சுரேகா மற்றும் லவ்லின் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகை விஜியின் இளைய மகளான லவ்லின் தற்போது சொல்வதெல்லாம் உண்மை புகழ்,லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்க உள்ள “ஹவுஸ் ஓனர்” என்று புதிய படத்தில் நடித்து வருகிறாராம்.

ஏற்கனவே லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய”ஆரோகணம் ” என்ற படத்தில் நடிகை விஜி சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அவரது மகள், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் “பசங்க” ,”கோலி சோடா ” உள்ளிட்ட படங்களில் நடித்த இளம் நடிகர் கிஷோர் கதாநாயகனாக நடிக்க உள்ளாராம்