ஸ்ரீதேவி முதல் இலியானா வரை – கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமான நடிகைகள் இத்தனை பேரா?

0
2139
Sarika
- Advertisement -

கோலிவுட் முதல் பாலிவுட் வரை திருமணத்திற்கு முன்பு கர்ப்பமான நடிகைகளின் பட்டியல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமா பிரபலங்கள் குறித்து பல சர்ச்சைகள் இணையத்தில் வருவது வழக்கமான ஒன்று தான். அதிலும் குறிப்பாக, திருமணத்திற்கு முன்பே பிரபல நடிகைகள் கர்ப்பமாக இருக்கும் தகவல் சமீப காலமாக இணையத்தில் உலா வந்து கொண்டு இருக்கிறது. இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அவர்களுடைய குடும்பத்தினருக்குமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை திருமணத்திற்கு முன்பு கர்ப்பமான நடிகைகளின் பட்டியலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

-விளம்பரம்-

ஸ்ரீதேவி:

இந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன பல மொழிகளில் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பிற்கு பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார். இவர் சாகும் வரை நடித்துக் கொண்டுதான் இருந்தார். இதனிடையே இவர் தயாரிப்பாளர் போனிக்கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பே நெருங்கி பழகி இருந்ததால் ஸ்ரீதேவி கர்ப்பமாகிவிட்டார். இவர்களுக்கு திருமணம் நடக்கும் போது ஸ்ரீதேவி ஏழு மதம் கர்பமாக இருந்தார். பின் திருமணம் ஆகி சில மாதங்களிலேயே ஜான்வி பிறந்து விட்டார்.

- Advertisement -

சரிதா:

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் உலகநாயகன் கமலஹாசனின் முன்னாள் மனைவி ஆவார். இவர்கள் இருவரும் கடந்த 1988 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால், இவர்களுக்கு 1986 ஆம் ஆண்டு குழந்தை பிறந்து விட்டது. அந்த குழந்தை வேற யாரும் இல்லைங்க நம்ம ஸ்ருதிஹாசன் தான். தற்போது இவர் தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

நீனா குப்தா:

பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருந்தவர் நீனா குப்தா. இவருக்கு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தும் ஆகிவிட்டது. இரண்டு திருமணத்திலும் இவருக்கு குழந்தை பிறக்கவில்லை. அதன் பின் இவர் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் உடன் லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பின் அவரையும் இவர் திருமணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

நடாஷா ஸ்டான்கோவிக்:

இவர் செர்பியா நாட்டு நடிகை. இவர் பாலிவுட்டில் சில படங்களில் நடித்திருக்கிறார். இவரும் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும் காதலித்து வந்தார்கள். அதோடு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்திருந்தார்கள். அப்போது நடாஷா கர்ப்பமானார். பின் இவருக்கு குழந்தையும் பிறந்தது. அதற்கு பிறகு தான் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

தியா மிர்சா:

பாலிவுட்டில் பிரபலமான நடிகை தியா மிர்சா. மின்னலே படத்தின் இந்தி ரீமேக்கில் இவர் நடித்திருந்தார். இவருடைய முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. பின் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்ததால் திருமணம் ஆகி சில மாதங்களிலேயே இவருக்கு குழந்தை பிறந்தது.

ஆலியா பட்:

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஆலியா பட். இவர் தன்னைவிட வயது அதிகமான ரன்பீர் கபூரை காதலித்து வந்தார். இவர்களுடைய காதல் இணையத்தில் வைரலாக பேசப்பட்டது. பின் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் ஆகி ஏழு மாதத்தில் ஆலியா பட்டிற்கு குழந்தை பிறந்தது.

எமி ஜாக்சன்:

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் எமி ஜாக்சன். இவர் தமிழில் சில படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து விட்டார். அதனை தொடர்ந்து இவர் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே இவர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார். திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள். பின் இவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு இவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள். திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கும் நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணமாக பிரிந்து விட்டார்கள். தற்போது வேறு ஒரு நடிகருடன் எமி ஜாக்சன் லிவிங் டு கெதரில் இருப்பதாக கூறப்படுகிறது.

கல்கி கோச்சலின்:

இவர் பிரெஞ்சு நடிகையாக இருந்தாலும் இந்தி படங்களின் மூலம் தான் பிரபலமானார். தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை, பாவ கதைகள் போன்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார். இவர் கை ஹெர்ஸ்பெர்க் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருந்தாலும், இவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்தார்.

நேஹா துபியா:

தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நேஹா. இவர் அங்கட் பேடி என்பவரை காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணம் ஆன சில மாதங்களிலேயே இவர்களுக்கு குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு முன்னே இவர் கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலியானா:

தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் இலியானா. இவர் இந்தியிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு தான் இவர் கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார். ஆனால், இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அது மட்டும் இல்லாமல் இவருடைய கணவர் யார்? என்ற தகவலையும் அறிவிக்காமல் சீக்ரெட் ஆகவே வைத்திருக்கிறார்.

Advertisement