உடல் எடை குறைந்து ஒல்லியாக மாறிய அனன்யா ! ஷாக் ஆன ரசிகர்கள் -புகைப்படம் உள்ளே

0
3161
Ananya actres
- Advertisement -

அனன்யா 1987ஆம் ஆண்டு கொச்சின் கேரளாவில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் அயில்யா கோபாலகிருஷ்ணன் நாயர்.இவருடைய அப்பா ஒரு திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். அனன்யா கொச்சினில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் பி.ஏ டிகிரி முடித்துள்ளார்.

Ananya-actress

இன்னொரு ஆச்சரியமான செய்தி என்னவென்றால் அனன்யா ஒரு வில்வித்தை சாம்பியன் ஆவார். பள்ளிகாலம் முதலே வில்வித்தை பயின்று வருகிறார். தனது 20 வயதில் கல்லூரியில் வில்வித்தை போட்டியின் போது ஒரு இயக்குனர் கண்ணில் பட, அவர்மூலம் அனன்யாவிற்கு பல பட வாய்ப்புகள் அப்போதே வந்தது.

- Advertisement -

இதனால் 2008 ஆம் ஆண்டு, பாசிட்டிவ் என்ற மலையாள படத்தில் நடித்தார். இதற்கு முன்னர் 1995ஆம் ஆண்டு 8 வயதில் தன் அப்பாவின் தயாரிப்பில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

Ananya-1

Ananyaa

பின்னர் 2009ஆம் ஆண்டு நாடோடிகள் படத்தின் மூலம்.தமிழில் அறிமுகம் ஆனார். இந்த படத்தில் தான் அயில்யா என்ற பெயர் அனன்யா என மாற்றப்பட்டது. அதன்பின்னர் தமிழ் சீடன், எங்கேயும் எப்போதும், அதிதி, என சில படங்களில் நடித்தார்.

இவருடைய முதல் திருமணம் ஒரு சர்ச்சையில் முடிந்தது. திருச்சுரில் ஒரு தொழில் அதிபருடன் இவருக்கு திருமணம் நடந்தது. ஆனால் அந்த திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டது. அந்த தொழில் அதிபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்ததால், அந்த திருமணம் நிருத்தப்பட்டது.

Actress-annanya

நடந்த கசப்பான சம்பவத்திற்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினார் அனன்யா. தற்போது டீவி ஷோக்களில் பங்கேற்று வருவதுடன் சில மலையாள படங்களிலும் நடித்து வருகிறார் அனன்யா.

Advertisement