பிராமண பெண்ணாக பிறந்த நான் வி.சி மகளாக வாழ்வதை நினைத்து – டாக்டர் ஷர்மிளா

0
1216
sharmila
- Advertisement -

சின்னத் திரையின் மூலம் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் நடிகை ஷர்மிளா. இவர் எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற டாக்டர் ஆவார். அதன் பிறகு இவர் ஜெயா டிவியில் ஒரு வினாடி வினா என்ற நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய தொலைக்காட்சி வாழ்க்கையைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து இந்த வாரம் இவர் என்ற உரையாடல் நிகழ்ச்சியை ஷர்மிளா நடத்தினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் இவர் விவாத மேடை போன்ற பல நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றார்.

-விளம்பரம்-

மேலும், மருத்துவத்துறையை சேர்ந்த மறைந்த டாக்டர் மாத்ருபூதம் உடன் இணைந்து இவர் விஜய் டிவியில் புதிரா? புனிதமா? என்ற நிகழ்ச்சியும் பங்கேற்று நடத்தினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் செக்ஸ் தொடர்பான கேள்விகளை டாக்டர் ஷர்மிளா முகம் சுளிக்காமல் பதில் அளித்ததால் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், இந்த நிகழ்ச்சியின் போது ஷர்மிளா குறித்து பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்து இருந்தது. அதற்கு பிறகு தான் இவருக்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

விடுதலை சிறுத்தைகள் மகளாக :

இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாள மொழிகளிலும் பல்வேறு சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் ஷர்மிளா வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் விசிக ஆதரவாளராகவும் திகழ்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் டாக்டர் ஷர்மிளா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, பிராமண பெண்ணாக பிறந்த நான் விடுதலை சிறுத்தைகள் மகளாக வாழ்வதை நினைத்து ஒரு நொடி கூட கவலைப்படவில்லை. பிராமின் என்பது என்னுடைய அடையாளமாக நான் நினைக்கவும் இல்லை. அதுதான் என்னுடைய அடையாளம், அதுதான் என்னுடைய ஒரு பகுதி என்று நான் ஒருபோதும் கருதியதும் இல்லை.

பிராமண குடும்பத்தில் பிறந்தது என்னுடைய தவறு இல்லை. என்னுடைய விருப்பத்தில் நடந்ததும் இல்லை. பிறந்து விட்டோம் என்பதால் அது என்னுடைய அடையாளமாக மாறாது. அதை என்னை எந்தவிதத்திலும் பாதித்ததும் இல்லை. பிராமண பெண்களுக்கு இருக்கும் வழிமுறைகள் யார் எழுதியது? எப்போது? எந்த காலகட்டத்தில் எழுதப்பட்டது? ஒரு சமூக ஒழுங்கு என்ற நிலை நிறுத்துவதற்கும், ஏற்றத்தாழ்வு உள்ள சமூகத்தில் இவர்கள் இதை தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை உருவாக்குவதற்காக ஏதோ ஒரு காலத்தில் இருந்தவர்கள் உருவாக்கியது.

-விளம்பரம்-

ஆன்மிகம் குறித்து சொன்னது:

என் அப்பா என்றும் தீவிரமான ஆன்மீகவாதி. காலை மாலை இரண்டு வேலையும் பூஜை செய்வார். அது அவருடைய நம்பிக்கை. அதில் நான் தலையிட முடியாது. அவரும் நீ ஏன் இதையெல்லாம் பேசுகிறாய் என்று என்னிடம் வற்புறுத்தியதும் இல்லை. ஆன்மீகமும் சமூக நீதியும் இணைந்தது தான் என்னுடைய வீடு. என்னுடைய கணவர் பாலாஜியை சந்தித்த பிறகு தான் எனக்கு நிறைய விஷயங்கள் புரிய ஆரம்பித்தது. அதற்காக அவருக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். பெண்ணியம் பேசுபவர்கள் கண்டிப்பாக சனாதனத்தை எதிர்பார்க்கள். ட்விட்டரில் என்னுடைய கருத்துக்களுக்கு விமர்சனம் வைப்பவர்களுடைய ஐடியை போய் பார்த்தால் முக்கால்வாசி பேக் ஐடியாகத்தான் இருக்கும்.

அரசியல் குறித்து சொன்னது:

டிபி பிக்சர் கூட வைக்க திராணியில்லாதவர்களாக தான் இருப்பார்கள். அதை எண்ணி நாம் வருத்தப்பட்டால் வாழ்வில் வெற்றி பெற முடியாது. இதனால் எல்லாமே கடந்து போக வேண்டும். அந்த புரிதல் வேண்டும். ஒரு நாளைக்கு 100 சங்கி நம் டைம் லைன்ல வந்து திட்டவில்லை என்றால் அன்று நாம் ஏதோ நல்லது செய்யவில்லை என்று தோன்றுகிறது. என்னுடைய சிந்தனைகளுக்கு பெரியாரும், அம்பேத்கரும் தான் காரணம். என்னுடைய கணவரிடம் இருந்து நிறைய அரசியல் கற்றுக் கொண்டேன். திருமால்வளவன் பேச்சுகள் மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement