நயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடியா.!வாய்பிளக்கும் இளம் ஹீரோக்கள்.! எத்தனை கோடி தெரியுமா.?

0
323
nayanthara

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தென்னிந்திய சினிமாவிலும் கொடிகட்டி பறந்து வருகிறார். கதாநாயகிகளை கமிட் செய்ய நினைக்கும் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் முதல் முன்னுரிமையாக இருப்பது நடிகை நயன்தாராவின் பெயர் தான்.

nayanthara

அதற்கேற்றார் போல நயன்தாரா நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹிட்தான் என்ற எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் சில வருடங்களாகவே நடிகை நயன்தாரா கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்தெடுத்து நடித்து வருகிறார். அவ்வாறு வெளியான படங்களும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இவையெல்லாம் ஒரு புறம் இருக்க நடிகை நயன்தாரா கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விடயம் தான். ஆனால், சமீபத்தில் தனது மார்க்கெட்டை உணர்ந்த நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை 4 கோடியாக உயர்த்தியுள்ளாராம். இது ஒரு சில நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை விட மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

nayantharacute
nayantharacute

நடிகை நயன்தாரா தற்போது அஜித் நடித்து வரும் ‘விசுவாசம் ‘ படத்தில் நடித்து வருகிறார். ஆனால், அந்த படத்தில் அஜித் ஹீரோ என்பதால் சம்பளத்தை கூட பேசாமல் ஒப்பந்தமானார் என்று ஏற்கனவே சில செய்திகள் வெளியாகியிருந்தது. ஆனால், நடிகை நயன்தாராவின் தற்போதைய சம்பள உயர்வு அறிவிப்பு இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு கொடுக்கும் சம்பளத்தில் இரண்டு கதாநாயகிகளை ஒப்பந்தம் செய்துவிடலாம் சென்று சிலர் புலம்பியும் வருகின்றனராம்.