விவேக், வடிவேலு உட்பட தமிழில் 3500க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்த நடிகர் மரணம் – யார் தெரியுதா?

0
487
- Advertisement -

பிரபல நடிகர் அடடே மனோகர் காலமாகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக இருந்தவர் அடடே மனோகர். இவர் நாடக கம்பெனியின் மூலம் தான் மேடை நாடகங்களில் முதலில் நடிக்க தொடங்கினார். இவர் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அதில் பல நாடகங்கள் இவர் எழுதி இயக்கி நடித்தும் இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவருடைய நாடகங்கள் ஒவ்வொன்றும் 60 முறைக்கும் மேல் மேடை ஏறி இருக்கிறது. அதோடு இவர் நாடகத்தில் நடிக்கும் முன்பு மிகப்பெரிய தனியார் நிறுவனத்தில் ஒரு பொறுப்பான பதவியில் பணியாற்றி இருந்தார். அதில் பணியாற்றிக் கொண்டே நாடகங்களில் நடித்து வந்தார். பின் இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

- Advertisement -

அடடே மனோகர் குறித்த தகவல்:

இவர் பல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் எழுதி நடித்தும் இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் வானொலி நாடகங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக, இவர் என்பது காலகட்டத்தில் இவர் எழுதி நடித்த அடடே மனோகர் தொடர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதனால்தான் இவரை அனைவரும் அடடே மனோகர் என்று அழைக்கிறார்கள். அதிலும், இவர் சின்ன மாப்பிள்ளை பெரிய மாப்பிள்ளை, ரமணி வெஸ் ரமணி போன்ற பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருந்தார்.

அடடே மனோகர் திரைப்பயணம்:

இதன் மூலம் இவருக்கு திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு வந்தது. மேலும் இவர் எஸ் வி சேகர், கிரேசி மோகன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். பெரும்பாலும் இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தான் நடித்திருக்கிறார். இதனிடையே இவர் தன்னுடைய மனைவியை 13 ஆண்டுகள் இழந்து மூன்று குழந்தைகளுடன் சென்னைக்கு வந்து விட்டார். இவர் நடிப்பு மட்டும் இல்லாமல் ஓவியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவர்.

-விளம்பரம்-

அடடே மனோகர் உடல்நிலை:

இவர் நிறைய ஓவியங்களை வரைந்தும் இருக்கிறார். பின் வயது மூப்பின் காரணமாக இவர் நடிப்பதிலிருந்து விலகி விட்டார். அதன் பின் இவர் 70 கிலோ இவருடைய உடல் எடை அதிகமானது. அப்போது இவர் நிறைய உடல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் இவர் ஸ்டீராய்டு ஊசி போட்டார். அதன்பின் இவருடைய உடல் எடை 120க்கும் மேல் அதிகமானது.

அடடே மனோகர் இறப்பு:

இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களாகவே உடல் நிலையில் மிகவும் அவஸ்தைப்பட்டு இருந்தார் மனோகர். நேற்று இரவு அடடே மனோகர் காலமாகி இருக்கிறார். இவருடைய மறைவு தமிழ் திரையுலனர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. இதனை அடுத்து பலருமே இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இவருடைய உடல் குமரன் சாவடியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

Advertisement