தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் விமர்சன ரீதியாகவும் வெற்றியடைந்திருக்கிறது. அந்த வகையில் விஜய் சேதுபதி நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் சூது கவ்வும். இந்த படத்தை நலன் குமாரசாமி இயக்கி இருந்தார். தற்போது இந்த படத்தினுடைய இரண்டாம் பாகம் உருவாகியிருக்கிறது.
இதில் மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், கருணாகரன், ரமேஷ் திலக் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். திருக்குமரன் என்டர்டைன்மென்ட் மற்றும் தங்கம் சினிமா சார்பில் தங்கராஜ், குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்தை எஸ்.ஜே அர்ஜுன் இயக்கியிருக்கிறார். இந்த படம் வரும் டிசம்பர் 13ஆம் தேதி தான் திரையரங்களில் வெளியாக இருக்கிறது. இதில் விஜய் சேதுபதி நடித்த ரோலில் மிர்ச்சி சிவா நடித்திருக்கிறார்.
சூது கவ்வும் 2:
இந்நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்று இருக்கிறது. இதில் படக்குழுவினருடன் பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, ரவிக்குமார் உட்பட பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார்கள். அப்போது நிகழ்ச்சியில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், சூது கவ்வும் படத்தினுடைய முதல் பாதம் ஒரு மாஸ்டர் பீஸ் படம். அந்தப் படத்தை நான் உதயம் தியேட்டரில் தான் பார்த்தேன்.
விழாவில் ஆதிக் சொன்னது:
நலன் குமாரசாமி முதல் பாகத்தை பண்ணவில்லை என்றால் இன்றைக்கு இரண்டாம் பாகம் வந்திருக்காது. இந்த படத்தின் இயக்குனர் அர்ஜுனோட நட்பு எனக்கு பிரபுதேவா சார் மூலம் தான் உருவானது. அர்ஜுன் அவர்கள் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் எழுத்துப் பணியில் ஒரு முக்கியமான நபராக இருந்தார். அந்த படத்தின் வெற்றி எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அர்ஜுனனுக்கும் பங்கு இருக்கிறது. அதேபோல் அவர் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் ஒரு முக்கியமான நபராக எழுத்து பணிகளில் வேலை செய்திருக்கிறார் என்று கூறி இருக்கிறார்.
ஆதித் ரவிச்சந்திரன் குறித்த தகவல்:
தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக ஆதித் ரவிச்சந்திரன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் முதன் முதலில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகம் ஆகியிருந்தார். அதனை தொடர்ந்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா போன்ற படங்களை எல்லாம் இயக்கியிருந்தார். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியாகியிருந்த மார்க் ஆண்டனி படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருந்தது.
குட் பேட் அக்லி படம்:
இதனை அடுத்து தற்போது இவர் நடிகர் அஜித்தை வைத்து குட் பேட் அக்லி என்ற படத்தை இயக்கி வருகிறார்.
அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது. தற்போது இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறது.