தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் வெளிவந்த படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்தது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருந்தார்கள். இந்த படம் அஜித் ரசிகர்கள் கொண்டாடி இருந்தார்கள்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் நல்ல வசூலும் செய்து இருந்தது. இதை அடுத்து அஜித் அவர்கள் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். இதை அடுத்து நடிகர் அஜித்தின் ஏகே 64 படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை இருக்கிறார் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ராகுல் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார்.
அஜித் குறித்த தகவல்:
இந்த படத்தினுடைய ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த படம் ஹார்பர் பின்னணியில் ஒரு கேங்ஸ்டர் கதை அம்சமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் தொடர்பான அறிவிப்பு சீக்கிரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் ஆதிக், படம் தொடங்குவதற்கான முந்தைய பணிகள் எல்லாம் முடிந்து விட்டது. லொகேஷன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பிப்ரவரியில் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறோம்.
https://www.youtube.com/watch?v=2OazGP_HnA4
ஆதிக் பேட்டி:
இது எனக்கு ஒரு ஸ்பெஷலான திரைப்படமாக இருக்கும். குட் பேட் அட்லி படத்திற்கு பிறகு அஜித் சார் இந்த படத்தை எனக்கு கொடுத்திருக்கிறார். அந்த பொறுப்போடு இந்த படத்தில் பணியாற்றி வருகிறேன். அஜித் சார் சினிமாவை எந்த அளவிற்கு நேசிக்கிறாரோ அந்த அளவிற்கு அவருடைய ஃபேஷனையும் நேசிக்கிறார். அதன்மூலம் நம் நாட்டிற்கு பெருமையும் சேர்த்து தந்து இருக்கிறார். அடுத்த முறையும் அவர் வெற்றி பெற கடவுளை வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=gw8hz1WBxyI
ஏகே 65 படம்:
மேலும், ஏகே 65 படத்தின் உடைய அப்டேட் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அஜித்தின் உடைய 65 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கயிருக்கிறார். இந்த படம் 2027 ஆம் ஆண்டு தான் ரிலீஸ் ஆக இருக்கிறது. தற்போது அந்த படத்திற்கான இறுதிக்கட்ட பேச்சு வார்த்தைகள் நடக்கிறது. லோகேஷ் சொன்ன ஒன் லைன் கதை அஜித்துக்கு பிடித்து விட்டதாம். இந்த படத்தை தயாரிக்கப்போவது யார் என்று இன்னும் தெரியவில்லை. கூடிய விரைவில் இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.






