வாய்ப்பின்றி தவித்து வந்த இளம் இயக்குனர்..!தற்போது தல 59 படத்தில் நடிக்கிறார்..!

0
842
Ajith
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்கள் தற்போது இயக்குனர் சிவா இயக்கி வரும் ”விஸ்வாசம் “படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் ‘மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ள அஜித் படத்தை இயக்குனர் வினோத் இயக்கவுள்ளார். மேலும், இந்த படத்தை தயாரிக்கும் நிறுவனத்திடம் பிங்க் என்ற பாலிவுட் படத்தின் ரீமேக் உரிமையும் உள்ளதாம். அந்த படத்தின் கதையில் தான் அஜித் நடிக்கவிருக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தின் ஆரம்ப பூஜை நேற்று (டிசம்பர் 14) நடைபெற்றது.மேலும்,படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் நடிக்கயிருக்கிறார். 

இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் சிம்புவை வைத்து ‘AAA ‘ என்ற படத்தை இயக்கினார்.அந்த படத்தால் சிம்பு மூலம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தார் ஆத்விக் ரவிச்சந்திரன். தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் ஆத்விக் தல59 படத்தில் நடிக்க வாய்ப்பை பெற்றுள்ளார்.  

-விளம்பரம்-
Advertisement