நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின் ஆளே மாறியுள்ள ஆதிக்.! அடுத்து இந்த ஹீரோவுடனாம்.!

0
559
- Advertisement -

ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர்இவர் சிம்புவை வைத்து இயக்கிய ‘AAA’ திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

-விளம்பரம்-

இந்த படம் தோல்வி அடைந்ததற்கு நடிகர் சிம்பு தான் காரணம் என்று குற்றம் சாட்டினார் ஆதிக் ரவிச்சந்திரன். பின்னர் கடந்த ஆண்டுஜி வி பிரகாஷை வைத்து மீண்டும் காதலை தேடி நித்யானந்தா என்ற படத்தை இயக்கினார். ஆனால், இந்த படம் பாதியிலேயே நின்றுவிட்டது. தற்போது இயக்குனர் வேலையை விட்டுவிட்டு நடிகராக களம் இறங்கியுள்ளார்.

இதையும் படியுங்க : முக்கியதுவம் இல்லை என்றாலும் ‘தல59’-ல் ஒப்புக்கொண்ட காரணம் அஜித் தான்.! பிரபல நடிகர் பேட்டி.! 

- Advertisement -

வினோத் குமார் இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின்னர் தனது கெட்ட முழுவதுமாக மாற்றி புதிய லுக்கில் இருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். தற்போது அருள்நிதி நடிக்கும் ‘கே 13’ இடத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் இயக்குனரும் நடிகருமான ஆதிக் இந்த தகவலை இந்த படத்தின் இயக்குனர் மணிகண்டன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

விறுவிறுப்பான திரில்லர் கதையாக அமைந்துள்ள இந்த படம் குறித்து இயக்குனர் மணிகண்டன் பேசுகையில், இந்த படத்தின் கதையை முடித்து விட்ட பிறகு இந்த படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிகர் சிறந்த நடிகைகளில் தேடிக்கொண்டிருந்தேன். தனிப்பட்ட முறையில் இயக்குனர் ஆதிக் நான் உருவாக்கிய கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று உணர்ந்தேன். அதனால் எனக்கு தெரிந்த நண்பர் மூலம் அவரை அணுகினேன் படத்தில் அவர் மிகவும் அருமையாக நடித்து வருகிறார் அனுபவம் வாய்ந்த அவரிடம் வேலை வாங்குவது மிகவும் சவாலாக இருந்தது.

-விளம்பரம்-

Advertisement