முதல் படம் வெளியாகும் முன்பே SK மற்றும் சிம்புவுடன் படம் – ஷங்கர் மகள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

0
566
Aditi
- Advertisement -

பாலிவுட்டை போலவே தமிழ் சினிமாவிலும் வாரிசு நடிகர்கள் அதிகமாகி கொண்டே போகின்றனர். விஜய், விக்ரம், விஜய் சேதுபதி என்று பலர் தங்கள் வாரிசுகளை சினிமாவில் அறிமுகம் செய்து இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவின் புதிய வாரிசு நடிகையாக வந்து இருப்பவர் தான் அதிதி. தமிழ் சினிமா உலகில் உலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் சங்கர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

-விளம்பரம்-

தற்போது இவர் ராம் சரணை வைத்து படம் இயக்கி வருகிறார். இந்த சூழ்நிலையில் இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக களம் இறங்கி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டு இருக்கும் கார்த்தி படத்தில் தான் சங்கர் மகள் அதிதி நடித்து இருக்கிறார். கார்த்தி ஹீரோவாக நடித்து இருக்கும் படம் ‘விருமன்’. இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி வருகிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : நானும் சாமி கும்புடுறவன் தான், என் ஹோட்டல்களுக்கு கூட அந்த பெயரை தான் வைத்து இருக்கிறேன் – மேடையில் உருக்கமாக பேசிய சூரி.

விருமன் படம்:

கொம்பன் படத்திற்கு பிறகு கார்த்திக் மற்றும் முத்தையா இந்த படத்தில் இணைந்துள்ளார்கள். இந்த படத்தை சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விருமன் படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி வருகிறது. இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

விருமன் ஆடியோ வெளியீட்டு விழா:

மேலும், இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடந்தது. இதில் கார்த்திக், சூர்யா, அதிதி உட்பட படக்குழுவினர் கலந்துக் கொண்டு சிறப்பித்திருந்தனர்.

அடுத்தடுத்து படங்களில் அதிதி :

இதை தொடர்ந்து சிம்புவின் கொரோனா குமார், எஸ் கேவின் ‘மாவீரன்’ என்று அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி இருக்கிறார் அதிதி. முதல் படம் வெளியாகும் முன்னரே அடுத்தடுத்து அதிதி படங்களில் கமிட் ஆகி இருப்பது இளம் நடிகைகளை கொஞ்சம் பொறாமை பட வைத்து இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் சிவகார்த்திகேயனுடன் ‘மாவீரன்’ படத்தில் நடிக்கும் அதிதிக்கு 25 லட்ச ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அடுத்த படங்களின் பிஸி :

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்தே அதிதி ‘கொரோனா குமார்’ படத்தின் சம்பளத்தை தீர்மானிக்க இருக்கிறாராம். ஒரு வேலை விருமன் படம் வெற்றியடைந்துவிட்டால் அதிதியின் சம்பளம் கண்டிப்பாக கூடிவிடும் என்கிறது கோலிவுட் வட்டாராம். அதே போல முதல் படம் என்பதலேயும் சூர்யாவின் தயாரிப்பு என்பதலேயும் விருமன் படத்திற்கு அதிதி எந்த சம்பளமும் வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Advertisement