நானும் சாமி கும்புடுறவன் தான், என் ஹோட்டல்களுக்கு கூட அந்த பெயரை தான் வைத்து இருக்கிறேன் – மேடையில் உருக்கமாக பேசிய சூரி.

0
464
soori
- Advertisement -

விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதை அடுத்து எழுந்த சர்ச்சைக்கு தற்போது நடிகர் சூரி கொடுத்திருக்கும் பதில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலில் தனது பயணத்தை துவங்கி தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சூரி. இவர் தமிழில் உள்ள முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்து இருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் இவருடைய காமெடி மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

தற்போது இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு “விடுதலை” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இதனை அடுத்து தற்போது இவர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. அதனைத் தொடர்ந்து இவர் கொம்பன், மருது, தேவராட்டம், புலிகுத்தி பாண்டி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

விருமன் படம்:

பெரும்பாலும், இவர் இயக்கிய படங்கள் எல்லாம் கிராமத்து பாணியில் இருக்கும். அதே போல் விருமன் படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இசை வெளியீட்டு விழா:

இந்த படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருக்கின்றனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. இதில் கார்த்திக், அதிதி,சூரி உட்பட படக்குழுவினர் கலந்துக் கொண்டு சிறப்பித்திருந்தனர். இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூரி கூறி இருந்தது, அண்ணா சூர்யா பல உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

விருமன் படத்தின் விழாவில் சூரி சொன்னது:

ஆயிரம் கோயில்களை கட்டுவதைவிட, ஆயிரம் அன்ன சத்திரம் கட்டுவதைவிட ஒருவரை படிக்க வைப்பதே பல ஆண்டுகள் பேசும். அதை அவர் மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என்று சூரி பேசி இருந்தார். இப்படி இவர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் தற்போது நடந்த விருமன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சூரி கூறியிருந்தது, மதுரையில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் ஆயிரம் அன்ன சக்கரத்தை கட்டுவதைவிட ஒருவரை படிக்க வைப்பது சிறந்தது என்று தான் நான் எதார்த்தமாக கூறியிருந்தேன்.

விளக்கம் கொடுத்த சூரி:

ஆனால், யார் மனதையும் புண்படுத்துவதற்காக நான் அதை சொல்லவில்லை. நான் மீனாட்சி அம்மனின் தீவிர பக்தர். மதுரையில் நான் தொடங்கியுள்ள ஓட்டலுக்கு கூட அம்மன் என்றுதான் பெயர் வைத்திருக்கிறேன். ஆனால், சிலர் நான் பேசியதை தவறாக புரிந்து கொண்டார்கள். நான் எந்த கோயிலுக்கும் எதிரானவன் இல்லை. நான் படிக்கவில்லை. அதனால் எல்லோருக்கும் படிப்பு கொடுப்பது சிறந்தது என்று கூறினேன். மகாகவி பாரதியார், காமராஜ் போன்றவர்கள் சொன்னதைதான் நான் சொன்னேன். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறியிருந்தார்.

Advertisement