‘ஆச்சர்யம் ஆனால் உண்மை’ ரஜினி படத்தில் இடம்பெற்ற அதிமுக பிரச்சாரப் பாடல் – இதோ வீடியோ.

0
212
Rajini
- Advertisement -

ரஜினிகாந்த் படத்தில் அதிமுக பிரச்சார பாடல் இடம் பெற்றிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டங்களில் தொடங்கி இன்று வரை இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும், இவருடைய நடிப்பு திறமைக்காக கடந்த ஆண்டு தேசிய விருதும் கிடைத்து இருந்தது.

-விளம்பரம்-

இதற்கு பலரும் பாராட்டி இருந்தார்கள். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருந்தது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், குடும்ப பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. தற்போது ரஜினிகாந்த் அவர்கள் தலைவர் 169 என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தை நெல்சன் குமார் இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இதற்கான வீடியோ எல்லாம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

இதையும் பாருங்க : வெளிநாட்டில் படிச்சா பொண்ணு கெட்டவ, காபி போட்டு கொடுக்கும் பெண் நல்லவ – கல்லூரி மேடையில் பேசிய Rj பாலாஜி. வைரலாகும் வீடியோ.

- Advertisement -

மாங்குடி மைனர் படம்:

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த இருந்த படத்தில் அதிமுக பிரச்சார பாடல் இருந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரஜினி நடிப்பில் 1978 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி வெளியாகி இருந்த படம் மாங்குடி மைனர். இந்த படத்தின் டைட்டில் ஏற்றவாறு மாங்குடி மைனர் ஆக நடித்திருந்தவர் விஜயகுமார். இவர் தான் படத்தின் கதாநாயகன். ரஜினி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரயில் விபத்தில் ஒரு குடும்பம் பிரிந்து விடுகிறது. குழந்தைகளில் ஒருவன் தந்தையிடம் வளர்கிறான்.

மாங்குடி மைனர் கதை:

இன்னொருவனை ரவுடி ஒருவன் வளர்க்கிறான். குழந்தைகளை தாய் தனித்து விடப்படுகிறாள். தந்தையிடம் வளர்கிற குழந்தை தான் விஜயகுமார். ரவுடியிடம் வளர்கிற குழந்தை ரஜினிகாந்த். தங்களுக்கு உதவி செய்தவரின் மகனை தேடி விஜயகுமார் பட்டினம் வருகிறார். பட்டினம் வந்த விஜயகுமார் முதல்முறையாக மவுண்ட் ரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அண்ணா நீங்க நெனச்சபடி நடந்திருக்கு, புரட்சித் தலைவர் கையில் நாடு இருக்கு என்று பாட்டு பாடுவார். மேலும், படத்தின் ஆரம்பத்திலேயே விஜயகுமாரை எம்ஜிஆர் பக்தராக காட்டியிருப்பார்கள்.

-விளம்பரம்-

படம் முழுக்க எம்.ஜி.ஆர் பாடல்கள்:

இப்படி படத்தில் பல இடங்களில் எம்ஜிஆரை புகழ்ந்து வசனங்கள், பாடல்கள் பேசப்பட்டு இருந்தது. ரஜினி தனக்கு கிடைத்த சிறிய சந்தர்ப்பத்தை பயங்கரமாக ஸ்கோர் செய்திருப்பார். கெட்டவராக இருந்து உண்மை தெரிந்த பின் நல்லவராக ரஜினிகாந்த் மாறி இருப்பார். இருந்தாலும் அவரை கடைசியில் இறந்த போவார். ரஜினி, விஜயகுமார் இருவருமே ஸ்ரீபிரியாவை காதலிப்பார்கள். ஆனால், இறுதியில் விஜயகுமாருக்கு வெற்றி கிடைக்கும். மாங்குடி மைனர் படத்தில் முழுக்க அதிமுக கட்சி சார்பான காட்சிகளும், வசனங்களும், பாடல்களும் வைப்பதற்கு காரணம் அந்த படத்தின் இயக்குனர் வி.சி. குகநாதன். இவர் இலங்கை தமிழர். தமிழ்நாடு வந்து பச்சையப்பா கல்லூரியில் பயின்று வந்தார். அப்போது அவரது திறமையை கண்டு தனது புதிய பூமியில் பணிபுரிய எம்ஜிஆர் வைத்திருந்தார்.

வி.சி. குகநாதன் பற்றிய தகவல்:

தொடர்ந்து அவரது படங்களின் கதை வசனத்தில் வி.சி. குகநாதன் பணியாற்றியிருந்தார். அப்படி எம்ஜிஆரால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர் தான் வி.சி. குகநாதன். இதனால் தான் இவர் தன்னுடைய படத்தில் எம்ஜிஆரை புகழ்ந்து பாடல் வைத்திருந்தார். அதுவும் படம் வெளியாவதற்கு முந்தைய வருடம் தான் எம்ஜிஆரின் அதிமுக ஆட்சி ஆட்சியை பிடித்து இருந்தது. ஆனால், இந்த பிரச்சார பாடலினால் படத்துக்கு எந்த ஒரு பிரபலமும் கிடைக்கவில்லை.படம் சுமாராகத்தான் போயிருந்தது. இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ராம்பூர் கால் லக்ஷ்மன் படத்தின் கதையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது. படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement