அந்த சரணம் முடியும்வரை தொண்டர்களின் ஆரவாரத்தில் திரையரங்குகள் அதிர்ந்தது – கரகாட்டக்காரன் கனகாவின் காஸ்ட்யூமில் இருந்த அரசியல் குறியீடு

0
831
- Advertisement -

கரகாட்டக்காரன் படத்தில் கனகாவின் காஸ்ட்யூமில் இருந்த அரசியல் குறியீட்டுக்கு அரசியல் தொண்டர்கள் செய்த வேலை தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே தமிழ் சினிமாவில் அரசியல் கட்சிகளின் சின்னத்தையும், கொடியின் நிறத்தை வைத்தும் காட்சிகள் எடுப்பது தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. இரட்டை இலை காட்டுவதும், உதய சூரியனைப்போல் ஐந்து விரல்களை காட்டுவதும், கருப்பு சிவப்பு உடையில் நடிகர்கள் வருவதும், அதிமுக கொடி நிறத்தில் உடைகள் அணிவது என்று தமிழ் சினிமாவில் சர்வ சாதாரணமாக நிகழக் கூடிய ஒன்றாக உள்ளது. ஆனால், இதை எல்லாம் நடிகர்கள் தான் செய்வார்கள்.

-விளம்பரம்-

பெரும்பாலான படத்தில் நடிகர்கள் தான் அரசியலின் பரப்புரை வேலையை செய்வார்கள். இதற்காக ரசிகர்கள், தொண்டர்கள் மத்தியில் கைதட்டலும் விசிலும் பறக்கும். ஆனால், நடிகைகள் கட்சி பரப்புரை வேலையை செய்வது அரிதான ஒன்று. அப்படி செய்த நடிகைகள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணி சொல்லும் அளவிற்கு தான் உள்ளார்கள். அந்த வகையில் யாருக்கும் கிடைக்காத கைத்தட்டலும், விசிலும் வாங்கியவர் கனகா. கரகாட்டக்காரன் படத்தில் கனகாவின் காஸ்ட்யூம் மூலம் தான் இந்த பேரும் புகழும் கிடைத்திருப்பது என்பது பலரையும் ஆச்சரியபடுத்திய ஒன்று.

- Advertisement -

கரகாட்டக்காரன் படம்:

இயக்குனர் கங்கை அமரன் இயக்கத்தில் 1989ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் தான் கரகாட்டகாரன். இந்த படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், காந்திமதி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் வசூல் மழையை குவித்து இருந்தது என்று சொல்லலாம். மேலும், இந்த படத்தை எடுக்கும்போது ராமராஜன் தான் தமிழகமெங்கும் பிரபலமாக இருந்தார். இவர் நடிகர் என்பதை தாண்டி அதிமுகவின் ஆத்மார்த்தமான தொண்டர் என்றும் சொல்லலாம்.

ராமராஜன் பற்றிய விவரம்:

அதோடு இவருக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் இருந்தார்கள் மேலும், எம்ஜிஆரின் வாரிசு என்று ராமராஜனை சொல்வார்கள். இதனால் படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு வண்டி கட்டி சென்று அவரைப் பார்த்து மாலை, சால்வை எல்லாம் அணிவிப்பார்கள். அதுமட்டும் இல்லாமல் ரசிகர்கள் அடுத்த முதல்வர் ராமராஜன் என்றெல்லாம் கோஷம் போட்டு இருந்தார்கள். அந்த அளவிற்கு பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் ராமராஜன். எம்ஜிஆரே கலையுலக வாரிசு என்று பாக்கியராஜை சொல்லியிருந்தாலும் அதிமுக தொண்டர்களுக்கு ராமராஜன் தான் கலங்கரை விளக்கமாக திகழ்ந்தவர்.

-விளம்பரம்-

கரகாட்டக்காரன் படம் பற்றிய தகவல்:

பின் ராமராஜன் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக இருப்பதற்கு கரகாட்டக்காரன் படமும் காரணம். கரகாட்டக்காரன் படத்தின் கதையும், கவுண்டமணி – செந்தில் காமெடி காட்சிகள், கிராமத்து காதல், இளையராஜாவின் இசை என்று எல்லாமே பக்கபலமாகவும், வெற்றி வாகை சூடும் வகையிலும் அமைந்தது. மேலும், படத்தில் மாங்குயிலே பூங்குயிலே பாடல் இரண்டு முறை வரும். முதலில் ராமராஜன் தனது குழுவினருடன் ஆடுவார். ஊர் மொத்தமும் கூடி நின்று வேடிக்கை பார்க்கும். அதன்பிறகு ராமராஜன் – கனகா இருவரும் சேர்ந்து டூயட் பாடலாக ஆடுவார்கள். அப்போது இந்த பாடலில் ஒரு இடத்தில் கனகா அதிமுக கட்சியின் கொடி நிறத்தில் ஆடை அணிந்து வந்து இருப்பார்.

கனகா அணிந்த அதிமுக நிற ஆடை:

அப்போது அந்த காட்சியின் போது திரையரங்களில் பட்டாசுகளும், பூக்கள், பேப்பர் என எல்லாம் வாரி இறைத்தார்கள். அதற்கு காரணம் அதிமுக கட்சியின் நிறத்தில் கனகா ஆடை அணிந்தது தான் காரணம். அதிலும் இந்த பாடலில் ராமராஜன் பூக்களுக்கு நடுவில் கனகாவை கையில் ஏந்தி காண்பிக்கும் காட்சி வேற லெவலில் இருக்கும். பொதுவாகவே அந்த காலகட்டத்தில் திருவிழாக்களிலும், பொருள் காட்சிகளிலும் திரைப்படங்களை திரையிடுவது உண்டு. அப்படி திரையிடப்பட்ட படங்களில் அதிமுக முறை திரையிடப்பட்டது கரகாட்டக்காரன் திரைப்படம் தான். அதிலும் இந்த காட்சிக்காகவே கூட்டம் கூடியது. அந்த அளவிற்கு கனகா படத்தில் அதிமுக கொடியின் நிறத்தை ஆடையில் அணிந்ததற்கு பாராட்டு குவிந்தது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement