அவரு கூட படம் பண்ண பேச்சு வார்த்த நடந்துட்டு இருக்கு – சிறுத்தை சிவாவின் அறிவிப்பை கேட்டு கதறும் மாஸ் நடிகரின் ரசிகர்கள். (யார் கூட பாருங்க)

0
598
Annaatthe
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் சிறுத்தை சிவா. இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் 2011 ஆம் ஆண்டு கார்த்திக், தமன்னா நடிப்பில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த சிறுத்தை திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார்.

-விளம்பரம்-

அந்த படத்திற்கு பின்னர் அஜித்தை மொத்த குத்தகை எடுத்த சிவா வீரம்,வேதாளம்,விவேகம் விஸ்வாசம் என்று அஜித்தை வைத்து தொடர்ந்து 4 படங்களை இயக்கிவிட்டார். இந்த படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் சிவா தான் இயக்கவிருக்கிறார் என்ற செய்தி கேட்டதும் ரசிகர்கள் தலையில் கை வைத்தனர்.

- Advertisement -

ஆனால், அது உண்மை இல்லை என்று தெரிந்ததும் தான் அஜித் ரசிகர்கள் சற்று ரிலாக்ஸ் ஆகினர். இப்படி ஒரு நிலையில் தான் இவர் ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கி இருந்த்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

இப்படி ஒரு நிலையில் விஜய்யை வைத்து படம் இயக்குவது குறித்து சிவா பேசியுள்ள வீடியோவை கண்டு விஜய் ரசிகர்கள் பதறிப்போய்யுள்ளனர். அந்த வீடியோவில் பேசிய அவர், பத்ரி படத்தின் போதுதான் விஜய் எனக்கு அறிமுகமானார் விஜய் சாரிடம் நான் அடிக்கடி பேசிக் கொண்டுதான் இருக்கிறேன் அவருடன் படம் பண்ணுவதாக பேச்சு வார்த்தைகள் எல்லாம் கூட நடந்து கொண்டிருக்கிறது. அதனால் நல்லதே நடக்கும் என்னுடைய எல்லா படத்தையும் பார்த்துவிட்டு மிகவும் பாராட்டினார். அதுவும் வேதாளம் படத்தைப் பார்த்துவிட்டு நேரில் அழைத்துப் பாராட்டினார்.

-விளம்பரம்-
Advertisement