ஷிவானி ஷாக்ல இருந்தே மீளல – இப்போ ‘விக்ரம்’ படத்தில் VJSக்கு ஜோடியாகியுள்ள மேலும் 2 சீரியல் நடிகைகள். (என்னப்பா ஆச்சி லோக்கிக்கு)

0
5372
shivani
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தில் சீரியல் நடிகை ஷிவானி கமிட் ஆகி இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் இதே படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேலும் இரண்டு சீரியல் நடிகைகள் கமிட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ என்ற தன் முதல் படத்திலையே தன்னை தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் மிக தரமான முத்திரையை பதித்தவர் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-188-1024x665.jpg

அந்த வெற்றி முத்திரையை தனது அடுத்த படமான ‘கைதி’யிலும் பதித்து சாதித்து காட்டினார். இந்த இரண்டு சூப்பர் ஹிட் படங்களின் பெயரைச் சொல்லி அவரை குறிப்பிட வருவதற்குள், கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘மாஸ்டர்’ இயக்குநர் ஆனார் லோகேஷ் கனகராஜ்.

இதையும் பாருங்க : சூப்பர் சிங்கரில் இருந்து வெளியேறிய பின்னர் மானஸி போட்ட முதல் உருக்கமான பதிவு.

- Advertisement -

மாஸ்டர் படம் மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து தற்போது கமலை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இந்த படத்தின் டீஸர் கூட வெளியாகி இருந்ததுஇந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நேரேன் போன்ற பலர் நடிக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நடிக்கிறார்.

இந்த தகவல் வெளியானதில் இருந்தே விஜய் சேதுபதிக்கு ஷிவானி ஜோடியா என்று பலர் கேலி செய்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குல் இந்த படத்தில் மேலும் இரண்டு சீரியல் நடிகைகள் கமிட் ஆக்கி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அது வேறு யாரும் இல்லை விஜய் டிவி மைனாவும், பிரபல தொகுப்பாளினியான மகேஸ்வரியும் தான்.

-விளம்பரம்-

மைனா நந்தினி ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ளார். அதே போல மகேஸ்வரியும் ஒரு சில படங்களில் நடித்து உள்ளார். இப்படி ஒரு நிலையில் விக்ரம் படத்தில் ஷிவானியோடு சேர்த்து விஜய் சேதுபதியுடன் மைனா மற்றும் மகேஸ்வரியும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து சீரியல் நடிகைகள் விக்ரம் படத்தில் கமிட் ஆவதை பார்த்து ரசிகர்கள் பலரும் கொஞ்சம் குழம்பி போய்யுள்ளனர்.

Advertisement