விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக பிரபலமாக ஒட்டிக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை , சீனியர், ஜூனியர் என்று மாறி மாறி ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியின் 8 வது சீசன் படு கோலாகலமாக துவங்கியது.பொதுவாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து யாராவது திறமையான பாடகர்கள் வெளியேறினால் சர்ச்சைகள் ஏற்படுவது வழக்கமான ஒரு விஷயம் தான். அதேபோல இதுவரை நடந்து முடிந்த பல்வேறு சூப்பர் சிங்கர் சீசன்களின் டைட்டில்களை தகுதியானவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து தான் வருகிறது.
இப்படி ஒரு நிலையில் கடந்த வாரங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதர் சேனா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.ஸ்ரீதர் சேனா இறுதிச் சுற்றுவரை வருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாக தான் அமைந்திருந்தது.
இதையும் பாருங்க : உங்க வயித்த காமிப்பத நிறுத்துங்க – பல விமர்சனங்களுக்கு இன்ஸ்டா சாட்டில் பதிலடி கொடுத்த பரீனா.
இதனால் சூப்பர் சிங்கர் நடுவர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து கடந்த வாரம் அய்யனார் வெளியேற்றப்பட்டு இருந்தார். இந்த அபிலாஷ், மானஸி மற்றும் பரத் ஆகிய மூவர் டேஞ்சர் சோனில் இருந்த நிலையில் இந்த வாரம் மானஸி வெளியேற்றப்பட்டவராக அறிவிக்கப்பட்டார். அதே போல ஆதித்யா மற்றும் அனு ஆகிய இருவரும் செமி பைனலுக்கு முன்னேறியுள்ள நிலையில் முத்து சிற்பி நேரடியாக பைனலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இப்படி ஒரு நிலையில் சூப்பர் சிங்கரில் இருந்து வெளியேறிய பின்னர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள, மானஸி முதலில் தாய் தந்தைக்கு நன்றி. நான் சூப்பர் சிங்கர் மூலம் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். நடுவர்களுக்கு நன்றி. எனது குடும்பம் பெரிதாகியுள்ளது. மீண்டும் உங்களை எல்லாம் வைல்ட் கார்ட் சுற்றின் மூலம் சந்திக்கிறேன்’ என்று மிகவும் உருக்கமான பதிவை போட்டுள்ளார்.