லேட் ஆன Flight, அரபிக் குத்து பாடலுக்கு ஏர்போர்ட்டில் ஆட்டம் போட்ட சமந்தா – வைரலாகும் வீடியோ.

0
597
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடா மன்னனாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும், இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் விஜய்க்காக எழுதியிருக்கிறார். விஜய்யின் அரபிக் குத்து பாடல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த பாடல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் அரபி குத்துப்பாடல் வெளியானதிலிருந்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகை சமந்தாவும் ஏர்போர்ட்டில் அரபி குத்து பாடலுக்கு செம குத்து போட்டிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சமந்தாவின் திரைப்பயணம்:

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனிடையே இவர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார்.

சமந்தா நடனம் ஆடிய குத்து பாடல்:

பின் இருவரும் சிறந்த ஜோடிகளாக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இப்படி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்ததற்கு பிறகு படங்களில் இருவரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும், பிரிவிற்கு பிறகு சமந்தா அவர்கள் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து இருந்த புஷ்பா என்ற படத்தில் ஊ சொல்லிறியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார்.

-விளம்பரம்-

அரபிக்குத்து பாட்டுக்கு நடனம் ஆடிய சமந்தா:

இந்த பாடலின் மூலம் சமந்தா ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதையும் கவர்ந்தார் என்று சொல்லலாம். இதனை தொடர்ந்து சமந்தா பல மொழி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது சமந்தா விஜய்யின் பீஸ்ட் படத்தில் வெளியாகியிருக்கும் அரபி குத்து பாடலுக்கு ஏர்போட்டில் செம குத்தாட்டம் போட்டிருக்கிறார். இந்த வீடியோவை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு விமானம் தாமதம் ஆகிவிட்டது என்று குறிப்பிடுகிறார். விமானம் தாமதமான நேரத்தில் தான் சமந்தா இந்த டான்ஸை போட்டிருப்பதாக மறைமுகமாக தெரிவிக்கிறார்.

விஜய்-சமந்தா நடித்த படங்கள்:

தற்போது சமந்தாவின் அரபிக்குத்து பாடல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், இவருடைய நடனத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சமந்தா – விஜய் இருவரும் சேர்ந்து தெறி, மெர்சல், கத்தி ஆகிய படங்களில் சேர்ந்து நடிக்கிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் சூப்பர்ஹிட் கொடுத்திருக்கிறது. அதிலும் இவர்கள் இருவரும் சேர்ந்து ஆடிய செல்பிபுள்ள பாடல் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement