விஜய் படத்தைப் பார்த்த பிறகு நான் அஜித் ரசிகை ஆகிவிட்டேன் – பிரபல நடிகை

0
5781
vijay

தமிழ் சினிமாவின் முடி சூட மன்னன் தளபதி விஜய். இது வரை 62 படங்களில் நடித்துள்ளார். தனது 25 வருட சினிமா வாழ்க்கையில் அவ்வப்போது தோல்வி படங்கள் கொடுத்து வந்தாலும், அவரது 70% படங்கள் வெற்றிப்படங்கள் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், ஒரு கட்டத்தில் தோல்வியைச் சந்திப்பது எதார்த்தமான ஒன்று. அதே போல் விஜயும் தனது சினிமா வாழக்கையில் தோல்வி படங்களை சந்தித்துள்ளார். அதிலும் சன் பிக்சர்ஸ் ‘சுறா’ படம் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் தோல்வியைச் சந்தித்தது.

இந்த படத்தைப் பார்த்ததும், தான் அஜித் ரசிகை ஆகிவிட்டதாக கூறுகிறார் பிக் பாஸ் புகழ் ஆர்த்தி. தற்போது எதற்கென்றே தெரியாமால் ட்விட்டர் தளத்தில் விஜய் ரசிகர்களுடன் தேவையில்லாமல் சண்டை போட்டு மூக்குடைபட்டு வருகிறார் ஆர்த்தி. அப்படி ஒரு உரையாடலில் தான்,

‘நான் சுறா படம் பார்த்த பிறகு தான் அஜித் ரசிகையாகிவிட்டேன் என கூறியுள்ளார் ஆர்த்தி’. மேலும், தன்னை அஜித் ரசியகாக அபிமானித்துக் கொள்ளும் ஆர்த்தி, ‘நாங்கள் (அஜித்யை குறிப்பிடுகிறார்) எந்த படம் நடித்தாலும், உங்களைப் (விஜயைக் குறிப்பிடுகிறார்) போல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் வராது’ எனவும் ட்வீட் செய்துள்ளார்.

சமீபத்தில் வெளியான விவேகம் படத்தைப் பற்றி ‘தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்ததாக தொலைகாட்சி விவாதத்தில் திரைப் பிரபலம் ஒருவர் கூற, ‘அவர் கூறிய ‘தலைல துண்டு’ என்ற ஹேஷ் டேக் சில நாட்கள் ட்விட்டரில் ட்ரெண்டு ஆனது குறிப்பிடத்தக்கது