மீண்டும் திரையரங்கில் 50% கட்டுப்பாடு – நாளை கர்ணன் ரிலீஸ் ஆகுமா ? தயாரிப்பாளர் விளக்கம்.

0
732
karnan
- Advertisement -

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் சினிமா, வணிகம், போக்குவரத்து என்று பல துறைகள் பாதிக்கப்பட்டது. கொரோனா பரவலால் திரையரங்குகள் பல மாதங்கள் மூடப்பட்ட நிலையில் அதன் பின்னர் 50 % இருக்கைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு திரையரங்குக்குள் இயக்கியது. இதையடுத்து கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் 100 சதவீத இறக்கைகளுடன் இயங்கி வந்தது.

-விளம்பரம்-
Image

இதனால் ரிலீசுக்காக காத்திருந்த பல படங்கள் அடுத்தடுத்த வெளியாகின. இந்த நிலையில், தமிழகத்தில் மீண்டும் கொரோனா பார்வல் படிப்படியாக அறிவித்து வருவதால் தமிழக அரசு மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.அதிலும் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதனால் ‘கர்ணன்’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்ததுள்ளது. இதனால் கர்ணன் படத்தை ஆவலோடு எதிர்பார்த்த தனுஷ் ரசிகர்கள் பலரும் கொஞ்சம் சோகத்தில் ஆழ்ந்தனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கர்ணன் ரிலீஸ் குறித்து அறிவித்துள்ள படத்தின் தயாரிப்பாளர் தானு,உறுதியாக கூறுகிறேன், எண்ணியதை எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி நல்லது நடந்தே தீரும், ‘கர்ணன்’ எல்லோர் மனதையும் கவர்வான்” என அப்படத்தின் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு கூறியுள்ளார். மேலும், அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பவன், வெல்வான் ‘கர்ணன்’ எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள இந்த படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாகநடித்துள்ளார். இது தனுஷின் 41 வது படமாகும். இவர்களுடன் யோகி பாபு. மலையாள நடிகர் லால் உள்ளிட்ட பலர்நடித்துள்ளனர் .கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தைதயாரித்துள்ளார். 1991 ஆம் ஆண்டு கொடியன்குளம் மணியாச்சி ஜாதி கலவரத்தை மையமாக வைத்து தான் தனுஷ் நடிக்கும் கர்ணன் படம் உருவாக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் இசையமைத்து உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement