‘அதே டெய்லர் அதே வாடகை’ பிரபல சேனலில் துவங்கப்பட்ட புதிய சீரியலை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
933
AhaKalyanam
- Advertisement -

அதே டெய்லர் அதே வாடகையா! என்று ஆஹா கல்யாணம் சீரியலை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் தான் ஆஹா கல்யாணம். சீரியலில் கோடீஸ்வரி மற்றும் அவரது 3 மகள்களான மகாலட்சுமி, ஐஸ்வர்யா, பிரபா ஆகியோர் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

-விளம்பரம்-

தன் மகள்களுக்கு எப்படியாவது பணக்கார குடும்பத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது கோடீஸ்வரியின் கனவாக இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தான் சீரியலின் நாயகன் சூர்யா மற்றும் அவனது குடும்பத்தினரை கோடீஸ்வரி சந்திக்கிறார். சூர்யாவையும் அவனுடைய இரண்டு சகோதரர்களையும் பார்த்த பிறகு கோடீஸ்வரி தனது மகள்களை சூர்யாவிற்கும் அவனது சகோதரர்களுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து முயற்சிகளை மேற்கொள்கிறார்.

- Advertisement -

பவ்யஸ்ரீ குறித்த தகவல்:

கோடீஸ்வரி கனவு நிறைவேறுமா? என்பதே சீரியலின் கதை. என்பதுதான் கதை. இந்த தொடர் ஒளிபரப்பான குறுகிய நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், இந்த தொடரில் பிரபா என்ற கதாபாத்திரத்தில் கோடீஸ்வரியின் மூன்றாவது மகளாக நடிப்பவர் நடிகை பவ்யஸ்ரீ. இவர் இதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற தொடரில் கதாநாயகியின் தங்கையாக நடித்திருந்தார். சமீபத்தில் தான் இந்த தொடர் முடிவடைந்தது.

ஆஹா கல்யாணம் தொடரில் பவ்யஸ்ரீ:

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனாவின் தங்கையாக பவ்யஸ்ரீ நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் ஏற்கனவே சில தொடர்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் ஆகா கல்யாணம் தொடரில் பவ்யஸ்ரீ கெட்டப்பை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, ஆஹா கல்யாணம் தொடரில் பிரபாவாக நடிக்கும் பவ்யஸ்ரீ பார்ப்பதற்கு ஆணை போல உடல் அணிந்து, முடியையும் கட் பண்ணி டாம் பாய் போல் இருக்கிறார். இது ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியல் நடிகையின் கெட் அப் என்பது அனைவரும் அறிந்ததே.

-விளம்பரம்-

சத்யா சீரியல்:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வந்த சீரியல் சத்யா. இந்த தொடர் காதல் மற்றும் குடும்பம் பின்னணியை மையமாக கொண்டது. இந்த தொடரில் ஆயிஷா மற்றும் விஷ்ணு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். ஆண் இயல்பு கொண்ட பெண்ணான சத்யாவின் வாழ்வை மையமாக வைத்து கொண்டது தான் சத்யா சீரியல். இந்த தொடர் சமீபத்தில் தான் முடிவடைந்தது.

விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

மீண்டும் அதே மாதிரி கெட்டப்பை விஜய் டிவி சீரியல் நடிகை பவ்யஸ்ரீ நடித்து வருவது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகிறது. பலரும் இதை பார்த்து அதே டைலர், அதே வாடகையா? சத்யா சீரியல் ஆயிஷா லுக்கை அப்படியே காப்பி அடித்து இருக்கிறது விஜய் டிவி என்றெல்லாம் கேலி செய்கிறார்கள். இதற்கு விஜய் டிவி நிறுவனம் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

Advertisement