டேய் நீ யார்னு கேட்டு என் அம்மாவை திட்டினார் – 2012ல் கேப்டனுடன் ஏற்பட்ட சண்டை குறித்து பேசிய வைரல் ரிப்போர்ட்டர்.

0
1393
Airportbabu
- Advertisement -

ஜெயிலர் திரைப்படம் ரஜினிக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்துள்ளது. இந்த படம் 500 கோடி வசூலை நெருங்கி கொண்டு இருக்கிறது. இதனால் ஜெயிலர் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது. அதோடு படம் வெளியான உடனே ரஜினி அவர்கள் இமயமலைக்கு சென்று விட்டார். மேலும், உதிர்ப்பிரேதேசத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினி உத்தர பிரதேச மாநிலம் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து ஜெயிலர் படம் பார்க்க இருக்கிறேன். ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு காரணம் கடவுளின் ஆசிர்வாதம் என்று பேசி இருந்தார்.

-விளம்பரம்-

ஆனால், ஜெயிலர் படத்தை பார்த்த ஆதி ஆதித்யநாத் வரவில்லை. இருப்பினும் உ.பி துணை முதல்வருடன் படம் பார்த்தார் ரஜினி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.அப்போது மரியாதை நிமிர்த்தமாக அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வர ரசிகர்கள் பலரும் பல விதமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

ஒரு சிலர் யோகி ஒரு ஆன்மீக வாதி அதனால் தான் ரஜினி அவரது காலில் விழுந்தார் அதில் என்ன தவறு என்று கூறி வந்தனர். மேலும், சிலரோ ரஜினிக்கு வயது 72, யோகிக்கு வயது 51 தான். இப்படி வயதில் சிறியவர் காலில் விழலாமா என்று விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய ஆன்மீக பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து இருந்தார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் உத்தர பிரதேசத்தில் பயணித்தபோது அந்த மாநிலத்தின் முதலைச்சர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்தது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ரஜினி “நட்பு ரீதியான சந்திப்பே தவிர வேறு ஒன்றும் அதில் கிடையாது.சந்நியாசி ஆகட்டும், யோகிகள் ஆகட்டும் அவர்கள் காலில் விழுவது என்னுடைய பழக்கம். நான் அதை தான் செய்தேன்’ என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ரஜினி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிக்கொண்டு இருக்கும் போதே ரஜினிக்கு அருகில் இருந்த நபர் ‘அடுத்த படம் என்னனு சொல்லிட்டு கிளம்புங்க’ என்று கூறினார். இதனால் கடுப்பான ரஜினி கையை நீட்டி ஒரு நிமிஷம் என்று நிருபரின் கேள்வியை கேட்டார். இதே நபர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கேப்டன் விஜயகாந்திடம் திட்டு வாங்கும் வீடியோ ஒன்றும் வைரலானது.

இந்த நிலையில் அந்த நபர் அளித்து இருக்கும் பேட்டி வெளியாகி இருக்கிறது. இவரது பெயர் ஏர்போர்ட் பாபு. பத்திரிகையாளரான இவர் கடந்த ஆண்டுதான் அந்த வழக்கையே நான் வாபஸ் வாங்கியதாகவும் கூறியிருக்கிறார். 2012 நவம்பர் 27 ஆம் தேதி விஜயகாந்தை நான் சந்தித்தபோது டேய் நீ யார் என்று அசிங்கமாக பேசினார். அப்போது நான் ஜெயா தொலைக்காட்சியில் பணிபுரிந்ததால் அவரை கேள்வி கேட்டதும் அவருக்கு கோபம் வந்துவிட்டது.

Advertisement