பாலாஜி மீது குப்பை கொட்டிய ஐஸ்வர்யா.! இவர்கள் செய்த செய்யலை பார்த்து கடுப்பான மக்கள்.! புகைப்படம் இதோ.!

0
1102
Balaji-Aishwarya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி 7 வாரம் கடந்துவிட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியின் மீதான சுவாரசியம் கூடிகொண்டே போகிறது. அதிலும் கடந்த வாரம் ஐஸ்வர்யாவிற்கு ராணி டாஸ்க் கொட்டப்பட்ட போது அவர் செய்த அட்டூழியங்கள் ஏராளம்.

-விளம்பரம்-

Aishwarya

- Advertisement -

அதிலும் குறிப்பாக கடந்த வாரம் ஐஸ்வர்யா, பாலாஜி மீது குப்பையை கொட்டியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானதோடு மக்கள் மத்தியில் ஐஸ்வர்யா மீது உச்சகட்ட எரிச்சலையும் பாலாஜி மீது பரிதாபமும், ஆதரவும் ஏற்படுத்தியது. ஆனால், நேற்று (ஆகஸ்ட் 7) ஐஸ்வர்யாவும், பாலாஜியும் அடித்த அந்தர் பல்டி ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ராணி டாஸ்கின் போது ஐஸ்வர்யா, பாலாஜி மீது குப்பை கொட்டியதை கண்ட ரசிகர்கள் கடும் கோவத்தில் இருந்து வந்தனர். அதற்கு ஏற்றார் போல பாலாஜி உண்ணா விரதமெல்லாம் கூட இருந்தார்.இவர்கள் இருவரின் பஞ்சாயத்தில் கமல், ஐஸ்வர்யாவை வெளுத்து வாங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் கமல் கோர்ட்டை கழட்டி ஐஸ்வர்யாவிற்கு அட்வைஸ் செய்ததை கண்ட போது ஏதோ கண்துடைப்பு போல தான் தெரிந்தது.

-விளம்பரம்-

balaji

அதனையே மக்கள் சற்று ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் இருந்த போது,நேற்று கமலிடம் அகம் டிவி வழியே போட்டியாளர்கள் பேசிக்கொண்டிருக்கையில் பாலாஜியும், ஐஸ்வர்யாவும் சோபாவில் ஒன்றாக கை கோர்த்து அமர்ந்து கொண்டு ஒன்றுமே நடக்காதது போல பேசிக்கொண்டதை கண்ட போது மக்களுக்கு பெரும் எரிச்சலை தான் ஏற்படுத்தியது.

Aishwarya-balaji

ஏனெனில், ஐஸ்வர்யா, பாலாஜி மீது குப்பை கொட்டிய போது பாலாஜி அமைதியாக தான் அமர்ந்து கொண்டிருந்தார். அதனை கண்டு கொண்டிருந்த பார்வையார்கள் தான் மிகவும் கொந்தளித்தனர். இதனால் பல ரசிகர்கள் ஐஸ்வர்யா இந்த நிகழ்ச்சியைவிட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்று கூறிவந்தனர். ஆனால், இவை எதுவும் நடக்காதது போல இவர்கள் இருவரும் கைகோர்த்து அமர்ந்து கொண்டடிருந்ததை கண்ட போது ஐஸ்வர்யா மீது ஏற்பட்ட கோபத்தை விட பாலாஜி மீது தான் மக்கள் தற்போது அதிகம் கோவம் கொண்டுள்ளனர்.

Advertisement