ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு நடிகர் தம்பி ராமையா சம்மந்தி ஆக இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் 90 கால கட்டம் தொடங்கி இன்று வரை படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். பெரும்பாலும் இவர் ஆக்ஷன் படங்களில் தான் நடித்து வருகிறார். இவர் படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதுமட்டும் இல்லாமல் 90 காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவின் புரூஸ்லி என்று பெயரெடுத்தவர் நடிகர் அர்ஜுன். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து இருக்கிறார். இவருடைய படங்கள் எல்லாமே ஆக்ஷன், அதிரடி, தேசப்பற்று பாணியில் இருக்கும். இதனாலே இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோகம் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். அதேபோல சுமார் 5க்கும் மேற்பட்ட பாடல்களையும் அர்ஜுன் பாடி இருக்கிறார்.
அர்ஜுன் திரைப்பயணம்:
தற்போது அர்ஜுன் வில்லன், குணச்சித்திர வேடங்களிலும் மிரட்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சாகச நிகழ்ச்சியான சர்வைவர் நிகழ்ச்சியையும் அர்ஜுன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். இறுதியாக மோகன்லால் நடிப்பில் வெளியாகி இருந்த மரைக்காயர் படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவருடைய ஐஸ்வர்யா சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ‘பட்டது யானை’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார்.
ஐஸ்வர்யா காதலிக்கும் நபர்:
அதன் பின்னர் இவர் அர்ஜுன் இயக்கிய தெலுங்கு படத்திலும் நடித்தார். இருந்தாலும், இவர் தன் தந்தையை போல் சினிமாவில் இடம் பிடிக்க முடியாமல் தவிக்கிறார். இப்படி ஒரு நிலையில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பிரபல காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை கடந்த சில வருடங்களாக காதலித்து வரும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் சில படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் திரைக்கு வர இருக்கு ராஜகிளி என்ற படத்தையும் அவர் இயக்கியிருக்கிறார்.
காதலை உறுதி செய்த தம்பி ராமையா:
அதோடு ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் உமாபதி பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியை அர்ஜுன் தான் தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் உமாபதிக்கும் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. பல மாதங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததால் கூடிய விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து நடிகர் தம்பிராமையா கூறியிருப்பது. சோசியல் மீடியாவில் வந்த செய்திகளெல்லாம் உண்மைதான்.
திருமணம் குறித்து சொன்னது:
சர்வைவர் நிகழ்ச்சியின் மூலம் தான் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதை உமாபதியே என்னிடம் சொன்னார். ஆனால், எனக்கு இவர்களுடைய காதல் கடந்த 20 நாட்களுக்கு முன்னால் தான் தெரிய வந்தது. உடனே நான் இதைப்பற்றி அர்ஜுன் சாரிடம் பேசினேன். நான் இப்போது வெளியூரில் லால் சலாம் படப்பிடிப்பில் இருக்கிறேன். விரைவில் சென்னை திரும்பி விடுவேன். அதேபோல அர்ஜுன் சார் தெலுங்கில் அவருடைய மகளை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். அதனுடைய படப்பிடிப்பு முடிந்து விடும். இரு விட்டாரூம் நிச்சயதார்த்தம் குறித்து பேச இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.