ஐஸ்வர்யா பைனல் வர கூடாது..! ஐஸ்வர்யா செய்த தந்திரம்..! கடுப்பான போட்டியாளர்கள்.!

0
353
Aishwarya

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய நிகழ்ச்சியில் பைனலுக்கு நேரடியாக சென்றுள்ள ஜனனியை தவிர மற்ற அனைவருமே இந்த வாரம் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டனர். மேலும், போட்டியாளர்கள் அனைவருக்குமே தனித்தனியாக டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கில் அனைவருக்கும் மதிப்பெண்கள் வழங்கபட்டு அதில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கபடும் என்று பிக் பாஸ் அறிவித்தார்.

Yashika

- Advertisement -

இந்த டாஸ்கில் ஒவ்வொரு போட்டியாளரும் கார்டன் ஏரியாவில் அமைக்கப்பட்ட பஸ்ஸர் ஒன்றில் கை வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அவர்களை தொடாமல் என்ன வேண்டுமானாலும் செய்து அவர்களை பஸ்ஸர் மீது இருந்து கையை எடுக்கவைக்க வேண்டும் என்பது தான் டாஸ்க்.

இந்த டாஸ்கில் முதல் ஆளாக விஜயலக்ஷ்மி பஸ்ஸர் மீது கை வைத்து நின்றபோது யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் மாறி மாறி விஜயலக்ஷ்மி மீது ஷேவிங் கிரீம், கோலமாவு, முட்டை என்று அனைத்தையும் வீசினர்.மேலும், ஐஸ் பேக்கையும் விஜயலக்ஷ்மி மீது வைத்த ஐஸ்வர்யா volini spray வை எடுத்து விஜியின் கண்கலில் அடிக்கவும் முயற்சி செய்தார். ஆனால், விஜி தனது கைகளை வைத்து மூடிக்கொண்டார். பின்னர் ரித்விகா, spray பயன்படுத்தாதீர்கள் என்று சொன்ன பிறகே ஐஸ்வர்யா spray அடிப்பதை நிறுத்தினார்.

viji

விஜயலக்ஷ்மி டாஸ்க் செய்யும் போது இத்தனை பொருட்களையும் பயன்படுத்தி விஜயலட்சுமியை தோற்கடிக்க முயற்சி செய்த ஐஸ்வர்யா, யாஷிகா பஸ்சரின் மீது கை வைத்து நின்றுகொண்டிருந்த போது யாஷிகாவிற்கு சாதகமாக விளையாடினார். மற்ற போட்டியாளர்கள் யாஷிகாவின் மீது முட்டை மற்றும் எண்னையை ஊற்றியபோது வேண்டுமென்றே தண்ணீரை யாஷிகா மீது ஊற்றினார். இதனால் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் ஐஸ்வர்யா, யாஷிகாவை காப்பற்ற வேண்டும் என்று தான் இப்படி செய்கிறார் என்று புரிந்து கொண்டனர்.

விஜயலக்ஷ்மி மீது ஐஸ்வர்யா, ஐஸ் பேக்கை வைத்தது போல விஜயலட்சுமியம் யாஷிகா மீது ஐஸ் பேக்கை வைப்பதற்காக இரண்டு ஐஸ் பேக்கை பிரிட்ஜூக்குள் வைத்துவிட்டு வந்தார். ஆனால், அதனை ஐஸ்வர்யா பிரிட்ஜூல் இருந்து எடுத்து வெளியே வைத்து விட்டார். பின்னர் விஜயலக்ஷ்மி ஐஸ் பேக்கை பிரிட்ஜூக்குள் இருந்து வெளியே எடுத்து வைத்திய என்று ஐஸ்வர்யாவிடம் கேட்ட போது, ஆமாம் ஒருவேளை எடுத்து வைத்திருப்பேன் என்று கூறியிருந்தார். இதனால் மற்ற போட்டியாளர்கள் அனைவருமே யாஷிகாவை காப்பாற்ற ஐஸ்வர்யா இப்படி செய்கிறார் என்று குறை கூறி வந்தனர்.

rityhvika

அதே போல நேற்றைய நிகழ்ச்சியின் இறுதியில் போட்டியாளர்களிடம், பைனலுக்கு செல்ல எந்த இரு நபருக்கு தகுதி இல்லை என்று நினைக்கிறீர்கள் என்பதை வெளிப்படையாக கூறும்படி பிக் பாஸ் கூறுகிறார். அதில் யாஷிகாவை தவிர மற்ற அனைவருமே ஐஸ்வர்யாவின் பெயரை தான் கூறியிருந்தனர். அதற்கு அவர்கள் முக்கிய காரணமாக கூறியிருந்தது ஐஸ்வர்யா எப்போதும் அவரது தோழியான யாஷிகாவிற்கு தான் ஆதரவாக இருக்கிறார் என்றும், டாஸ்க் என்று வந்தால் கூட மற்றவர்களை வேறு மாதிரிபார்க்கிறார் ஆனால், யாஷிகாவை மட்டும் ஆதரவாக இருக்கிறார் என்று கூறினர்.

Advertisement