பொன்னம்பலம், ரித்விகா,ஜனனி…! பட்ட பெயர் வைத்து கிண்டல் செய்த ஐஸ்வர்யா, யாஷிகா..!

0
951
Yashika-Anandh
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஷாரிக் அவர்கள் கமல் முன்னிலையில் வெளியேற்றப்பட்டார். அவரது வெளியற்றதின் போது பலரும் கண் கலங்கிய நிலையில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா சற்று அதிகமாகவே அழுதார்கள் என்பது தான் உண்மை. குறிப்பாக ஐஸ்வர்யா நான்கு முறைக்கும் மேல் அவரை கட்டி பிடித்து அழுதார். கடந்த வாரம் ஷாரிக் அவர்களை ஐஸ்வர்யா சற்று கடுமையாக நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இந்நிலையில் அவர் வெளியேற்றத்திற்கு பிறகு யாஷிகா, ஐஸ்வர்யா மற்றும் மஹத் நாமினேஷன் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். யாரை இந்த வாரம் நாமினேட் செய்ய வேண்டும் என்பது பற்றிய உரையாடலாகவே அது இருந்தது.

- Advertisement -

அப்போது மஹத் அவர்கள் சென்றாயனை கண்டிப்பாக நோமின்டே செய்யப்போவதாக கூறினார். அதற்கு யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ரசத்தை நோமின்டே செய்ய கூறினார். மஹத் அவர்களுக்கு முதலில் ரசம் யார் என்று புரியவில்லை பிறகு ரித்விக்காவை தான் ரசம் என்று குறிப்பிடுகிறார்கள் என்று அவர் புரிந்து கொண்டார்.

அதோடு எந்த வாரம் நாமினேஷனில் அதிக வாக்குகள் பெறப்போவது பொரியல் என்று யாஷிகா கூறுகிறாள். அவர் பொரியல் என்று கூறுவது நடிகர் பொன்னம்பலம் அவர்களை தான்.

-விளம்பரம்-

அது மட்டுமல்லால் அவர்கள் நடிகை ஜனனி அவர்களுக்கு வைத்துள்ள பட்ட பெயர் ஜலப்பினோ. வயதிலும் அனுபவத்திலும் அவர்களை விட பெரியவர்களை இவ்வாறு பட்ட பெயர் வைத்து அழைப்பது எந்தவிதத்திலும் ஏற்புடையது அல்ல. இவர்கள் இருவரும் இந்த வார நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் இவ்வாறு பட்ட பெயர் வைத்து கிண்டல் செய்வதை கமல் அவர்கள் தட்டி கேட்கவேண்டும், குறும்படம் காண்பித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதே இணையதளவாசிகளின் கருத்து.

Advertisement