-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

எல்லாம் உன்னால தான்னு, செருப்பால அடிச்சிக்கிட்டேன். இரண்டு முறை மணிரத்னம் பட வாய்ப்பை தவறவிட்டது குறித்து ஐஸ்வர்யா.

0
185

தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் ஐஸ்வர்யா. இவர் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகள். ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருந்த ஐஸ்வர்யா, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடா போன்ற வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.பிறகு சினிமாக்களில் பட வாய்ப்புகள் குறைந்த உடன் இவர் படங்களில் குணசித்திர வேடங்களிலும் வில்லியாகவும் நடித்து வந்தார். மேலும் தமிழ் மற்றும் மலையாள தொலைக்காட்சிகளிலும் கலக்கியவர்.

-விளம்பரம்-

மணிரத்தினம் படத்தை தவறவிட்ட ஐஸ்வர்யா:

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா , “எனக்கு ரோஜா படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது”,அப்போதுதான் என்னுடைய பாட்டி ஒரு தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக என்னை கமிட் செய்திருந்தார். அந்தப் படத்தில் கமிட் ஆனதால் என்னால் மணிரத்தினம் படத்தில் நடிக்க முடியவில்லை.அதற்கு முன்னதாகவும் தளபதி படத்தில் ஷோபனா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக என்னை கேட்டு இருந்தார்கள். அப்போதும் அதேபோல் ஒரு தெலுங்கு படத்தில் கமிட் ஆகி இருந்தேன் அதனால் அந்த படத்திலும் என்னால் நடிக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டு இருந்தார்.

ஏ .ஆர்.ரகுமானின் மிரட்டல் பாடல்கள் கேட்ட ஐஸ்வர்யா:

மேலும் அந்த நிலையில் தான் நான் ஹைதராபாத் கிளம்பினேன் ஆனால் அங்கு தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பிரச்சனை ஏற்பட அந்தத் திரைப்படம் நான்கே நாட்களில் நிறுத்தப்பட்டு விட்டது. அப்போதுதான் எனது உறவினர் ஒருவர் ரோஜா படத்தின் பாடல்கள் வெளியாகி உள்ளது என்று சீடியை கொடுத்தார் .புது மியூசிக் டைரக்டரை மணிரத்தினம் தன்னுடைய திரைப்படத்தில் கமிட் செய்தது இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பாட்டி மீது கோபமடைந்த ஐஸ்வர்யா:

-விளம்பரம்-

அப்போதுதான் ருக்குமணி ருக்குமணி பாடலை நான் முதல் முதலில் கேட்டேன். என்னுடைய பாட்டியின் பெயரும் ருக்குமணி தான். அந்தப் பாடலைக் கேட்ட உடனே ஐயோ நல்ல படத்தை மிஸ் செய்து விட்டோமே என்று என் கண்கள் கலங்கியது என்று தெரிவித்திருந்தார்.அப்போதுதான் என் பாட்டியை கோபத்துடன் நான் பார்த்தேன். அந்தப் பாடல் அந்த அளவிற்கு நன்றாக இருந்தது. அந்தப் படத்தை நாங்கள் குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து பார்த்தோம்.

-விளம்பரம்-

இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை கைநழுவி விட்டு விட்டோமே என்ற விரத்தில் நொந்து விட்டேன். காரில் வரும் பொழுது என்னுடைய குடும்பத்தார் யாரும் என்னிடம் பேசவில்லை. வீட்டிற்கு வந்தவுடன் என்னை நானே செருப்பால் அடித்துக் கொண்டேன். அதைப் பார்த்த என் பாட்டி வேண்டாம் அடித்துக் கொள்ளாதே என்று கூறினார். அதற்கு நான், “உன்னை அடிக்க முடியாது அதனால்தான் என்னை நானே அடித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தேன்” என்று வேடிக்கையாக கூறி இருந்தார்.

கடைசி வாய்ப்பையும் தவறவிட்ட ஐஸ்வர்யா:

கடைசியில் திருடா திருடா திரைப்படத்திலும் எனக்கு வாய்ப்பு வந்தது. அப்போதும் ஹிந்தி படத்தில் என்னை கமிட் செய்து விட்டார் எனது பாட்டி. அதனால் மணிரத்னம் சார்ப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று கூறியிருந்தார்.இப்போது ஐஸ்வர்யா சோப்பு மற்றும் அழகு சார்ந்த பொருட்களை தயாரித்து விற்கும் பிசினஸ் செய்து வருகிறார், அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news