சீயானுடன் அந்த கிஸ் சீன்,வாந்தி தான் – விக்ரமுடன் நடித்த அனுபவம் சொன்ன நடிகை.

0
1866
- Advertisement -

சியான் விக்ரமுடன் நடித்த ஒரு முத்தக் காட்சியில் எனக்கு ரொமான்ஸ் வரவில்லை வாந்தி தான் வந்தது என்று நடிகை ஐஸ்வர்யா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் ஐஸ்வர்யா. இவர் பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகள் ஆவார். இவருடைய உண்மையான பெயர் சாந்தா மீனா. இவர் சினிமாவுக்காக தன்னுடைய பெயரை ஐஸ்வர்யா என மாற்றிக் கொண்டார்.

-விளம்பரம்-

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருந்தவர் ஐஸ்வர்யா. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிகையாக நடித்து இருக்கிறார். பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லியாகவும் மிரட்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சின்னத்திரை தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் ஐஸ்வர்யா பங்கு பெற்று வருகிறார்.

- Advertisement -

ஐஸ்வர்யா திரைப்பயணம்:

விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக ஐஸ்வர்யா பங்கேற்றிருந்தார். தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு இவர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய்யின் நடிப்பில் உருவாகி இருந்த யானை படத்தில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தன்னுடைய பொருளாதார நிலை காரணமாக சோப்பு தயாரித்து வீடு வீடாக சென்று விற்பனை செய்து வருகிறார். இது குறித்து கூட சமீபத்தில் பேட்டி கொடுத்து இருந்தார்.

விக்ரம்-ஐஸ்வர்யா நடித்த படம்:

இந்நிலையில் விக்ரம் உடன் நடித்த பட அனுபவம் குறித்து நடிகை ஐஸ்வர்யா கூறி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் ஐஸ்வர்யா அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், 1992 ஆம் ஆண்டு ஸ்ரீராம் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் மீரா. இந்த படத்தில் நானும், விக்ரமும் நடித்து இருந்தோம். அப்போது தான் விக்ரம் உடன் கிஸ்ஸிங் சீன் எடுக்கப்பட்டது. உண்மையில் சொல்லப்போனால் மிகக் கொடூரமாக இருந்தது. அது ரொமான்ஸ் கிஸ் கிடையாது.

-விளம்பரம்-

லிப் கிஸ் காட்சி குறித்து ஐஸ்வர்யா சொன்னது:

வீனஸ் ஸ்டுடியோவில் முழங்கால் அளவில் தண்ணீர் இருக்கும். அதில் டெக்னிசியன், கேமராமேன் எல்லோரும் கால்லை வைத்து இருப்பார்கள். அந்த தண்ணியில் விக்ரம் என்னை முக்கி எடுத்து ஒரு ஆத்திரத்தில் கோபத்தில் கொடுக்கிற மாதிரி முத்தக்காட்சி. அப்போது எனக்கு வாயில் தண்ணீர், விக்ரமுக்கு மூக்கில் தண்ணீர் ஏறி ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதில் எங்களுக்கு ரொமான்ஸ் எப்படி வரும் வாந்தி தான் வந்தது. எப்படியோ அந்த காட்சியை எடுத்து முடித்தது.

விக்ரம்-ஐஸ்வர்யா இடையேயான உறவு:

அது ரொம்ப கஷ்டமான ஒன்றாக இருந்தது. உண்மையைச் சொல்லப் போனால் நானும் விக்ரமும் பயங்கரமாக சண்டை போடுவோம். நான் கெனி என்று தான் விக்ரமை கூப்பிடுவேன். ஆரம்பத்தில் பயங்கர சண்டை போடுவோம். மீரா படம் எடுக்கும் போது எனக்கும் கெனிக்கும் ஆகவே ஆகாது. கீறி,பாம்பு மாதிரி ரெண்டு பேரும் சண்டை போட்டுக் கொண்டிருப்போம். செட்டில் உள்ள எல்லோருமே சமாதான படுத்துவார்கள். அந்த அளவிற்கு இரண்டு பேருக்குமே செட்டாகாது. அதற்குப் பிறகு ஒரு நாள் ஷூட்டிங்கில் கெனியும் நானும் பேச ஆரம்பித்தோம். அப்போது எங்களுக்குள் நட்பு உருவானது. இதையெல்லாம் மறக்க முடியாது என்று கூறினார்.

Advertisement