பாவம் இப்போ தான் கொரோனா சரியாச்சி அதுக்குள்ள மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யா. இதான் காரணமாம்.

0
483
aishwarya
- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் தனுஷ் திகழ்ந்து வருகிறார். இவர் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார். தனுஷ் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் ஹாலிவுட், பாலிவுட்டிலும் கால்த்தடத்தை பதித்து இருக்கிறார். இதனிடையே நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

தற்போது இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். மேலும், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த 18 ஆண்டுகளாக திருமண பந்தத்தில் இருந்த நிலையில் திடீரென இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக இருவரும் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் அறிவித்து இருக்கிறார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவர்கள் அறிவித்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்தில் கூட ஐஸ்வர்யாவை விவாகரத்துச் செய்வதில் தனுஷ் மனம் மாறி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்தாலும் முறையாக அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் இல்லை என்று தனுஷ் கூறியதாகச் சொல்லப்படுகிறது. அதோடு குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று இருவருக்கும் அட்வைஸ் செய்து வருகின்றனர். மேலும், பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தனுஷ் நடித்து முடித்துள்ள மாறன் திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது.

தனுஷின் திரைப்பயணம்:

அதுமட்டும் இல்லாமல் தனுஷ் தி கிரேட் மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார். இதை தொடர்ந்து தனுஷ் அவர்கள் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் தற்போது தனுஷ் அவர்கள் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக தனுஷ் ஹைதராபாத்தில் உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதோடு இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல் ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பத்தை இயக்கி வருகிறார். இந்த மியூசிக் ஆல்பத்தை ஐதராபாத்தில் தான் ஐஸ்வர்யா இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-

ஐஸ்வர்யாவின் ஆல்பம் சாங்:

சமீபத்தில் நண்பர் ஒருவரின் பார்ட்டியில் தனுஷ் கலந்துகொண்ட போது அங்கு எதிர்பாராத வகையில் ஐஸ்வர்யாவை சந்தித்திருக்கிறார். ஆனால், ஒருவருக்கொருவர் பேசி கொள்ளவில்லை. மேலும், ஐஸ்வர்யா தனுஷின் பிரிவிற்கு பிறகு தன்னுடைய அடுத்த பணிகளில் தீவிரமாக உள்ளார். இவர் முஸாஃபிர் என்ற பாடலை இயக்கி வருகிறார். மேலும், அந்தப் பாடலின் போஸ்டர் ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மீண்டும் மருத்துவமணையில் ஐஸ்வர்யா:

சமீபத்தில் தான் ஐஸ்வர்யா அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்தார். பிறகு குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின் இதுகுறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியிருப்பது, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரானா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்தேன். தற்போது மீண்டும் காய்ச்சல் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டு உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன்.

வைரலாகும் ஐஸ்வர்யாவின் பதிவும்,புகைப்படமும்:

மேலும், இந்த மருத்துவமனையில் மருத்துவரை சந்திக்கும் போது மிகுந்த ஆற்றலும் மன உறுதியும் கிடைத்தது போல் இருக்கிறது. குறிப்பாக மருத்துவர் ப்ரீத்தி அவர்களுடன் பேசும்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறது என்று பதிவிட்டிருக்கிறார். பிறகு மருத்துவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஐஸ்வர்யாவின் இந்த பதிவும் புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து ரசிகர்கள் ஐஸ்வர்யா கூடிய விரைவில் குணமாக வேண்டுமென்று வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய மியூசிக் ஆல்பம் ரிலீஸுக்கு தயாராகி விட்டதாகவும் விரைவில் இந்த மியூசிக் ஆல்பம் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

Advertisement