தனுஷை பிரிந்த பின் ஐஸ்வர்யாவின் முதல் வேலை இதுதான் – வைரல் புகைப்படம் இதோ.

0
607
Aishwarya
- Advertisement -

தனுஷின் பிரிவிற்கு பின்பு ஐஸ்வர்யா செய்த முதல் வேலை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சினிமா பிரபலங்களின் விவாகரத்து குறித்த செய்திகள் சோசியல் மீடியாவில் அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த வாரம் முழுவதும் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து குறித்த பேச்சு தான் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு நடிகை சமந்தா- நாக சைதன்யா இருவரும் விவகாரத்தை அறிவித்து இருந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஆழ்த்தியது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து பேரிடியை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் தனுஷ் திகழ்ந்து வருகிறார். இவர் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு தனுஷ் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார். தனுஷ் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார்.

- Advertisement -

தனுஷ் திரை பயணம்:

அதுமட்டும் இல்லாமல் இவர் ஹாலிவுட், பாலிவுட்டிலும் கால்த்தடத்தை பதித்து இருக்கிறார். இதனிடையே நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா திருமணம் லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். மேலும், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த 18 ஆண்டுகளாக திருமண பந்தத்தில் இருந்த நிலையில் திடீரென இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக இருவரும் தங்கள் சமூக வலைதளபக்கத்தில் அறிவித்து இருக்கிறார்கள்.

தனுஷ்– ஐஸ்வர்யா விவாகரத்து:

இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவர்கள் அறிவித்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். இந்நிலையில் தனுஷின் பிரிவிற்கு பின் ஐஸ்வர்யா செய்த முதல் வேலை குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. தனுஷின் பிரிவிற்கு பின் ஐஸ்வர்யா அப்படி என்னதான் செய்திருக்கிறார் என்றால்,

-விளம்பரம்-

விவாகரத்துக்கு பின் ஐஸ்வர்யா செய்த முதல் வேலை:

இவர் ஏற்கனவே 3 மற்றும் வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது ஐஸ்வர்யா ஹைதராபாத்தில் இருக்கிறார். தனுஷின் பிரிவிற்கு பிறகு இவர் தன்னுடைய அடுத்த பணிகளில் தீவிரமாக உள்ளார். மேலும், இவர் ஒரு மியூசிக் ஆல்பத்தை இயக்க இருக்கிறார். அதனால் இந்த ஆல்பம் குறித்த ஆலோசனையில் தயாரிப்பு நிறுவனத்துடன் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். இந்நிலையில் இந்த மியூசிக் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஐதராபாத்தில் நடைபெற்றது.

ஆல்பம் தயாரிப்பு நிறுவனம் பதிவிட்ட பதிவு:

அது குறித்த புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
பின் அதில் அவர் கூறியது, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த ஆல்பத்தில் நடிப்பவர்கள், இசையமைப்பாளர் குறித்து பேசப்பட்டது. விரைவில் இந்த மியூசிக் ஆல்பத்தின் படபிடிப்பு தொடங்கும் என்று கூறி இருந்தார். அதுமட்டுமில்லாமல் தனுசும் வாத்தி படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத்தில் தான் உள்ளார். தனுஷ்– ஐஸ்வர்யா இருவருமே ஒரே ஓட்டலில் தங்கி இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

Advertisement