என் மனைவி புதுசா ஆரம்பிச்சிருக்காங்க.! இனி உங்களுக்கு Fun தான்.! ட்வீட் செய்த தனுஷ்.!

0
1828
Dhanush-Aishwarya
- Advertisement -

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் தனுஷ். தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட் , ஹாலிவுட் வரை தனது திறமையை நிரூபித்துள்ளார். மேலும், பாடகராகவும், கவிஞ்சராகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார் தனுஷ்.

-விளம்பரம்-

தனுஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் மகள், ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்கள் இருவருக்கும் யாத்ரா என்ற மகளும், லிங்கா என்ற மகனும் பிறந்தனர்.

- Advertisement -

ஐஸ்வர்யாவின் சகோதரி சௌந்தர்யா திரைத்துறைக்கு ஏற்கனவே அறிமுகமாகிவிட்டார். ஆனால், தனுஷ் மனைவி ஐஸ்வர்யா சினிமாவில் இதுவரை கால்பதிக்கவில்லை. இருப்பினும் கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற விழா ஒன்றில் இவர் போட்ட பரத நாட்டியம் படு கிண்டலுக்குள்ளானது என்பது நாம் அனைவரும் அறிவோம்.

https://www.instagram.com/aishwaryaa_r_dhanush/?utm_source=ig_profile_share&igshid=208jvid67gqk

இந்த நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் சமீபத்தில் புதிதாக இன்ஸ்டகிராம் கணக்கு ஒன்றை துருந்துள்ளார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த தனுஷ் தனது மனைவி இன்ஸ்டாகிராமில் வந்துட்டாங்க. இனி உங்களுக்கு fun தான் என்று ட்வீட் செய்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement