ஐஸ்வர்யாவின் காதலர் தின பதிவு, கடந்த ஆண்டு பதிவிட்ட புகைப்படத்தை பாருங்க, அதுலயே தனுஷ் இல்லயே.

0
445
Dhanush
- Advertisement -

சோசியல் மீடியா முழுவதும் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து குறித்த பேச்சு தான் அதிகமாக சென்று கொண்டிருக்கின்றது. அதே போல் கடந்த ஆண்டு முழுவதும் சோசியல் மீடியாவில் நடிகை சமந்தா- நாக சைதன்யா விவகாரத்து பற்றிய பேச்சு தான் அதிகம் இருந்தது. இந்த சர்ச்சை முடிவதற்குள் நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் தனுஷ் திகழ்ந்து வருகிறார். தனுஷ் அவர்கள் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட திரைப்பட திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார்.

-விளம்பரம்-
dhanush

அதோடு இவர் கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவூட் என அணைத்து மொழிகளிலும் கால் தடம் பதித்து வருகிறார். இதனிடையே தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யாவும் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் ஆவார். இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் தாங்கள் பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சமூக வலைத்தளத்தில் அறிவித்து இருப்பது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து:

மேலும், 18 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையில் இருந்து இருவரும் பிரிவதாக பரஸ்பரமாக முடிவு செய்துள்ளோம் என்று கூறி இருந்தார்கள். இவர்களின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். அதோடு இவர்களுடைய விவாகரத்து குறித்து பலரும் கண்ணு,மூக்கு, காது வைத்து பல விதமாக கதைகளை அவிழ்த்து விட்டும் வருகின்றனர். மேலும், இவர்கள் இருவரும் பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து விவகாரம்:

அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் ஐஸ்வர்யா கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து அறிவித்ததில் இருந்து குடும்பத்தினர், ஐஸ்வர்யா உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் அவர்களை சேர்த்து வைக்க பல முயற்சி செய்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் ஐஸ்வர்யாவை விவாகரத்துச் செய்வதில் தனுஷ் மனம் மாறி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

மனம் மாறிய தனுஷ்:

ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்தாலும் முறையாக அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் இல்லை அவரை தனுஷ் கூறியதாகச் சொல்லப்படுகிறது. அதோடு தற்போது வரை விவாகரத்து வேண்டாம் என்கிற முடிவில் தான் தனுஷ் இருக்கிறார். தங்களின் குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு ஐஸ்வர்யா பதிவிட்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

காதலர் தினத்தில் ஐஸ்வர்யா பதிவிட்ட புகைப்படம்:

நேற்று உலகம் முழுவதும் காதலர் தினத்தை சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் கொண்டிருந்தார்கள். அந்த வகையில் ஐஸ்வர்யா தனுஷ் தன்னுடைய சோசியல் மீடியாவில் ஒரு அழகான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு காதலர் தின வாழ்த்து தெரிவித்து இருந்தார். மேலும், அந்த கேக்கில் ‘கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்ட வாக்குறுதி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை பார்த்த பலர் அடுத்த ஆண்டு தனுஷுடன் கொண்ட வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர். அதே போல கடந்த ஆண்டு காதலர் தினத்தில் தன் மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்த ஐஸ்வர்யா, அந்த புகைப்படத்தை என்னுடைய தனுஷ் எடுத்த புகைப்படம் என்று பதிவிட்டு இருந்தார்.

Advertisement