கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு சென்றது ஆரவ் மற்றும் ஓவியவின் காதல் மற்றும் ரோமன்ஸ் தான். அதே போல தற்போது ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் இளம் போட்டியாளர்களான ஷாரிக் மற்றும் ஐஸ்வர்யா ஜோடிகளின் ரொமான்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொண்டே போகிறது.
ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் இருவருக்கும் ஒரு புரிதல் சென்று கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் நடத்த ஒரு டாஸ்கின் போது கூட ஷாரிக் தனது காதலை ஐஸ்வர்யாவிடம் மறைமுகமாக தெரிவித்திருந்தார். அதனை ஐஸ்வர்யாவும் ஏற்று கொண்டது போல தான் தோன்றியது.
இந்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டில் இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஐஸ்வர்யா உடற்பயிற்ச்சி செய்து கொண்டிருந்தார். அப்போது ஷாரிக் சக போட்டியாளர்களை இந்த ஷோ முடிந்தது அனைவரும் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு போங்க என்று கூறினார். இதையடுத்து ஐஸ்வர்யாவிடம் உனக்கு ‘நான் வெஜ்ஜில் என்ன பிடிக்கும் , வெஜிடேரியனில் என்ன பிடிக்கும் என்று கேட்டார். பின்னர் அதே கேள்வியை யாஷிகாவிடமும் கேட்டார்.
ஷாரிக் இது போன்ற கேள்விகளை ஐஸ்வராய்விற்காக தான் கேட்டார் என்று அவர் கேட்டதில் இருந்தே தெரிந்தது. மேலும், தன்னை பற்றி ஐஸ்வர்யா அறிந்து கொள்ள வேண்டும் என்றே, ஷாரீக் தனது குடும்பம் பற்றிய பல விடயங்களை யாஷிகாவிடம் குறிக்கொண்டே இருந்தார். மேலும்,ஐஸ்வர்யா உடற் பயிற்சி செய்து கொண்டிருந்தபோதும் ஷாரிக் , ஐஸ்வர்யாவிடம் அக்கறையாக பேசிகொண்டே இருந்தார்.