கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் வெறுப்பையும் பேராதரவையும் ஒரு அளவாக சம்பாதித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ஷாரிக் மீது காதல் கொண்ட இவர், தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்டுள்ள இளம் போட்டியாளர் மீது க்ரஷ்ஷில் இருக்கிறாராம்.
விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் பல்வேறு பிரபலங்கள் பங்கு பெற்றுள்ளனர். அதில் ரசிகர்களுக்கு பரிட்சயம் இல்லாத சில போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர் அதில் முகன் ராவவும் ஒருவர்.
இதையும் பாருங்க : தேவையணி மகள்களா இது.! எப்படி வளர்ந்துவிட்டார்கள் பாருங்க.! புகைப்படங்கள் இதோ.!
மோகன் ராவ் ஒரு மலேசிய பாடகர் ஆவார் இவருக்கு மலேசியாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும், இவர் தமிழிலும் ஒரு சில ஆல்பம் பாடல்களை பாடியுள்ளார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இவருக்கும் மலேசிய வாழ் தமிழர்கள் சமூக வளைத்தளத்தில் பெரும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், மலேசியாவில் இவருக்கு அதிக பெண் ரசிகர்களும் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான ஐஸ்வர்யா தத்தாவும் முகன் ராவ் மீது ஈர்ப்பு கொன்டுள்ளார். ஐஸ்வர்யா தாத்தா அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் லைவ் சாட் செய்வது வழக்கம்.
அந்த வகையில் சமீபத்தில் லைவ் சாட்டில் ஈடுபட்டிருந்த போது”பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்த போட்டியாளர் யார் என்ற கேள்விக்கு முகன் ராவ் என்று பதிலளித்துள்ளார். அவரது குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது என்று கூறியுள்ள ஐஸ்வர்யா, வாய்ப்பு கிடைத்தால் அவருடன் டேட் செல்ல ஆசை என்று கூறியுள்ளார்.