நேத்துல் இருந்து ஒரே மெசேஜ் – அர்ஜுன் தாஸுடனான உறவு குறித்து முதல் முறையாக சொன்ன ஐஸ்வர்யா லட்சுமி.

0
656
ayswarya
- Advertisement -

சீரியல் நடிகையான சௌந்தர்யா பொன்னியன் செல்வன் பட நாயகி பதிவிட்டிருந்த புகைப்படத்தை பகிர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சௌந்தர்யா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரகமாக முடிவடைந்த சூப்பர் சிங்கர் சீனியர் என்ற பாட்டு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் சௌந்தர்யா.

-விளம்பரம்-

நடித்த படங்கள் :

இந்த நிகழ்ச்சி மூலம் தான்  சௌந்தர்யா மக்கள் மத்தியில் பிரபலமானார். பின் அதே சேனலில் ஒளிபரப்பான பகல் நிலவு சிரியலில் கதாநாயகியாக நடித்தார். அதன் பின் இவர் ஷார்ட் பிலிம் படங்களிலும் நடித்து உள்ளார். இவர் நடித்த yours shamefully ஷார்ட் பிலிம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் உருவானது. பின் இவர் பின் பல நிகழ்ச்சியில் பங்கேற்றும் வந்துள்ளார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 3:

மேலும், பிக் பாஸ் சீசன் 3 யில் இவர் பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தனராக சென்று இருந்தார். அப்போது இவர் முகேனுடன் இணைந்து பாடிய வீடியோ பெரும் வைரலானது. தற்போது பாடகி சௌந்தர்யா நடிகையாக வெள்ளித்திரையிலும் கால் தடம் பதித்து கலக்கி கொண்டு வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கூட நடித்து இருந்தார்

ஆஸ்ட்ரிச் முட்டா அளவு வலி :

இந்த நிலையில் தான் சௌந்தர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா மற்றும் அர்ஜுன் தாஸ் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, அந்த பதிவில் “ஆஸ்ட்ரிச் முட்டா அளவு வலி” என்று பதிவிட்டுள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா. இவர் பின்னர் நடித்த கட்டா குஸ்தி திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்ததால் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தார்.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா – அர்ஜுன் தாஸ் புகைப்படம் :

இந்த நிலையில் தான் கைதி மற்றும் விக்ரம் படத்தின் மூலம் பிரபலமானவர் அர்ஜுன் தாஸ், இவரின் “லைஃப் டைம் செட்டில்மென்ட்” வசனம் மிகவும் பிரபலமானது. இந்த நிலையில் தான் அர்ஜுன் தாஸ் உடன் சமீபத்தில் “செல்பி” புகைப்படம் ஒன்றாய் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் நடிகை ஐஸ்வர்யா. இந்த புகைப்படத்தை தான் சீரியல் நடிகை சௌந்தர்யா பகிர்ந்து “தீக்கோழி முட்டா அளவு வலி” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா கருத்து :

இனைய வாசிகளை பொறுத்தவரையில் ஐஸ்வர்யா நடிப்பில் பின்னர் வரவிற்கும் திரைப்படங்களை பிரபல படுத்தத்தான் இந்த விதமாக அர்ஜுன் தாஸ் உடன் சேர்ந்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் என நெட்டிசன்கள் கூறிவரும் நிலையில் ஐஸ்வர்யா மற்றொரு பதிவை பகிர்ந்து அதில் நண்பர்களே, எனது கடைசி இடுகையைப் பற்றி, அது பெரிதாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நாங்கள் எதிர்பாராத விதமாக சந்தித்தோம் எனவே பபுகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

எங்களுக்கு இடையே எதுவும் கிடையாது நாங்கள் நண்பர்கள் தான், அர்ஜுன் தாஸ் ரசிங்கர்கள் என்னிடம் கடந்த சில நாட்களாகவே கருத்து கேட்டு வருகின்றனர். பயப்படவேண்டும் அர்ஜுன் தாஸ் உங்களுடையவர்தான் என்று சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதிவிட்டிருந்தார் நடிகை ஐஸ்வர்யா.

Advertisement