நீங்க மூ***ங்க. ஐஸ்வர்யா மேனனை திட்டி தீர்க்கும் Pubg ரசிகர்கள். காரணம் இந்த ட்வீட் தான்.

0
1189
aishwarya
- Advertisement -

நேற்று (செப்டம்பர் 2) புதன் கிழமை  பப்ஜி, பப்ஜி மொபைல் லைட், வீசாட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம் உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடைவிதித்து இருந்தது. இது தொடர்பாக  மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்  சில செல்போன் செயலிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது தொடர்பாக அமைச்சகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன.அதன் அடிப்படையில் இந்த செயலி தடை செய்யபட்டுள்ளது என்று அறிவித்தது.

-விளம்பரம்-

இந்த 118 தடை செய்யப்பட்ட செயலியில் பப்ஜி விளையாட்டை தடை செய்தது தான் இளசுகளை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா மேனன், பப்ஜி தடை செய்ததை கிண்டலடிக்கும் வகையில் ட்வீட் ஒன்றை செய்திருந்தார். அதில், பப்ஜி ரசிகர்கள் யாராவது இருக்கீங்களா ? பப்பஜி தடை குறித்து என்ன நினைக்கிறீர்கள் ? எபப்டியும் நான் அதை விளையாடியது இல்லை என்று கூறி இருந்தார்.ஐஸ்வர்யா மேனனின் இந்த கருத்தால் பப்ஜி ரசிகர்கள் கோபத்திற்கு உள்ளாகி ஐஸ்வர்யா ராஜேஷை திட்டி தீர்த்து வருகின்றனர்.

- Advertisement -

சில தினங்களுக்கு முன்பு இந்தியா- சீனாவுக்கு இடையே நடந்த எல்லைப் பிரச்சனையில் பல சோக சம்பவங்கள் நிகழ்ந்தது. கடந்த மாதம் லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து உள்ளது. இதனால் அந்த இடத்தில் இருக்கும் பதற்றத்தைத் தணிக்க இந்திய – சீன ராணுவ அதிகாரிகள் மத்தியில் பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அங்கு ஓரளவு நிலைமை சரியாக தொடங்கியது. இந்த நிலையில் கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் இந்திய-சீன எல்லை பகுதியான லடாக்கில் இரு நாட்டு வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது.

https://twitter.com/RcbTom/status/1301170206023114753

இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் இறந்ததாக தகவல் வெளியாகின. மேலும், இந்தியா – சீனா எல்லைப் பகுதியில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேரை சீன இராணுவம் கொன்ற பிறகு இரு நாட்டுக்கும் இடையே பிரச்னை பெரிய அளவுக்கு உருவெடுத்துள்ளது. டெல்லியில் உள்ள சீனத் தூதரங்கம் முன்பும், கர்நாடகா முதலான வேறு சில இடங்களிலும் சீனாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

-விளம்பரம்-

ஆளும் கட்சியின் தலைவர்கள் பலர் சீனாவின் பொருட்களை வாங்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். அதோடு பலரும் சீன பொருட்கள் மற்றும் செயலிகளை புறக்கணிப்போம் என்றும் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டுவந்தனர். இதை தொடர்ந்து டிக் டாக் உட்பட 59 சீன செயலியை இந்திய செய்தது.

Advertisement