பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் நடிகை – இந்த கேரக்டர எத்தன தடவதா மாத்துவாங்க ?

0
763
pandianstores
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து மீண்டும் ஒரு நடிகை விலக இருக்கும் தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-
pandian

மேலும், இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் சீரியலுக்கு இருக்கிறது. மேலும்,சீரியலில் முல்லையும், கதிரும் சமையல் போட்டியில் சிறப்பாக விளையாடி பத்து லட்சம் ரூபாய் பணத்தை வெல்கிறார்கள். அதை மூர்த்தியிடம் கொடுக்கிறார்கள். ஆனால், மூர்த்தி எங்களுக்கு பணம் வேண்டாம். நீ வீட்டிற்கு வந்ததே போதும் என்று சொல்கிறார்கள்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

இதை மற்றவர்களுக்கும் தெரிய வைக்க கண்ணன் மீனா அப்பாவை வரவைக்கிறார். அவர் வந்த உடனே தன்னுடைய வேலையை ஆரம்பித்து விடுகிறார். பின் ஒருவரை மாற்றி ஒருவர் சண்டை போட்டு மூர்த்தி மீனாவிடம் உன்னுடைய அப்பா, அம்மாவை வெளியே போக சொல் என்று சொல்கிறார். உடனே ஜனார்த்தன் இது என் வீடு, என்னை வெளியே போ சொல்லறதுக்கு நீங்கள் யாரு? நீங்கள் வெளியே போங்கள் என்று சொல்கிறார்.

pandian

சீரியலின் கதை:

இதனால் மனமுடைந்து மூர்த்தியின் மொத்த குடும்பமும் வீட்டை விட்டு வெளியே வருகிறது. கதிர் தன்னுடைய வீட்டிற்கு மொத்த குடும்பத்தையும் கூட்டிக் கொண்டு செல்கிறார். வீட்டை கட்டும் வரை கதிர் வீட்டில் இருப்பதாக மூர்த்தி நினைக்கிறார். ஆனால், கதிர் வீடு சின்னதாக இருப்பதால் மீனாவும், ஐஸ்வர்யாவும் கஷ்டப்படுகிறார்கள். இருந்தாலும், வேறு வழி இல்லை என்று பொறுத்துக் கொள்கிறார்கள். மூர்த்தியின் மொத்த குடும்பமும் தாங்கள் வீடு கட்டும் இடத்தை ரிஜிஸ்டர் செய்து விடுகிறார்கள்.
பின் அங்கு வீடு எப்படி எல்லாம் கட்ட வேண்டும் என்று திட்டம் போடுகிறார்கள்.

-விளம்பரம்-

மீனா அப்பா செய்யும் சதி:

இதையெல்லாம் பார்த்து மீனாவின் அப்பா ஜனார்த்தன் வயிறு எரிகிறார். பின் மீனாவிடம் தனியாக சந்தித்து இந்த வீட்டை விட்டு வெளியே வந்து விடு நான் உன்னை பார்த்துக்கொள்கிறேன் என்று கூறுகிறார். ஆனால், மீனா வழக்கம் போல் என்னால் இந்த குடும்பத்தை விட்டு வர முடியாது. எனக்கு இந்த குடும்பம் தான் முக்கியம் என்று சண்டை போட்டு விடுகிறார். ஜனார்த்தன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை பழிவாங்க என்ன திட்டமிடுகிறார்? மூர்த்தியின் குடும்பம் வீடு கட்டி தனியாக செல்வார்களா? என்று பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

சீரியலில் விலகும் நடிகை:

இந்த நிலையில் சீரியலில் இருந்து மீண்டும் ஒரு நடிகை மாற இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சீரியல் தொடங்கியதில் இருந்து முல்லை கதாபாத்திரத்தில் நடித்த நடிகைகள் தான் மாற்றம் செய்திருந்தார்கள். தற்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காயத்ரி விலக இருப்பதாக கூறப்படுகிறது. காரணம், தற்போது இவர் படங்களில் கமிட் ஆகி இருப்பதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க நேரமில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

Advertisement